- Advertisement -
Homeபொழுதுபோக்குஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் பிளாப் ஆகும் என்று நான் படப்பிடிப்பின் முதல் நாளிலேயே...

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் பிளாப் ஆகும் என்று நான் படப்பிடிப்பின் முதல் நாளிலேயே கூறினேன்… அதிர்ச்சி கொடுத்த நடிகர் சந்தானம்…

- Advertisement -

நடிகர் சந்தானம் இயக்குனர் ராஜேஷ் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றியை ருசித்து இருக்கின்றன. இந்த கூட்டணியில் முதலாவதாக வெளிவந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. ஜீவா கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையையும் காதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது.

இதில் ஜீவாவின் நண்பனாக நடித்திருந்த சந்தானம் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருந்தார். படத்தில் இடம்பெற்று இருந்த ஒவ்வொரு வசனங்களும், திரையரங்குகளில் விசில் பறக்க வைத்தன. ஜீவா கூறும் மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் டயலாக் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இப்படி முதல் திரைப்படத்திலேயே சிக்சர் விளாசினார் ராஜேஷ்.

இதனைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் இரண்டாவதாக வெளிவந்த பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படம் வெற்றிவாகை சூடியது. இதில் ஆர்யாவுடன் சந்தானம் இணைந்து காமெடி சரவெடிகளை அள்ளி வீசி இருந்தார். அதில் சந்தானத்தின் நல்லதம்பி கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக நண்பேண்டா டயலாக் அதில்தான் ரீச் ஆனது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ராஜேஷ் சந்தானம் கூட்டணியில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம், திரையரங்குகளில் திருவிழா கோலம் பூண்டது. இந்த முறை உதயநிதி ஸ்டாலின் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பார்த்தா கதாபாத்திரத்தில் வந்து பலரையும் சிரிக்க வைத்தார் சந்தானம்.

இப்படி முதல் மூன்று திரைப்படங்கள் ராஜேஷ் சந்தானம் கூட்டணியில் வெற்றி மேல் வெற்றி குவித்து பாராட்டை பெற்றன. ஆனால் இதன் பிறகு ஒரு வெற்றி திரைப்படத்தை கூட கொடுக்க முடியாமல் ராஜேஷ் திண்டாடி வருகிறார். ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வணக்கம் டா மாப்ள, பிரதர் என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன.

இந்த நிலையில் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் முதல் நாள் சூட்டிங்கிலேயே இது பிளாப் ஆகும் என்று தான் கூறியதாக சந்தானம் தெரிவித்துள்ளார். படத்தில் எனக்கு கரீனா சோப்ரா என்ற பெண் வேடம் கொடுக்கிறார்கள். அந்தக் கேரக்டரை பார்த்து ஹீரோயின் பொறாமைப்படுகிறாள். கோட்டா சீனிவாச ராவ் காதல் கொள்கிறார். இப்படி இருக்கும் போது அந்த மேக்கப் ரொம்ப வலுவாக இருக்க வேண்டும் என்று நான் கூறினேன். சொல்லப்போனால் அதற்கு அவ்வை சண்முகி திரைப்படம் போன்ற ஒரு மேக்கப் தேவைப்பட்டது. அப்படி என்றால் தான் ஆடியன்ஸ்களிடமும் ஒரு நம்பகத்தன்மை வரும் என்றேன். ஆனால் இதனை யாருமே அப்போது கண்டுகொள்ளாத போதே இது ஒர்க் அவுட் ஆகாது என்று நினைத்தேன் என பேசி இருக்கிறார்.

சற்று முன்