பிரபலமான ஓட்டல்களுக்கு நேரில் சென்று விதவிதமான உணவு வகைகளை சாப்பிட்டு அதில் யூடியூப்களில் பதிவேற்றம் செய்து மாதந்தோறும் சிலர் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர். எல்லோரும் சம்பாதித்து சாப்பிடுகின்றனர் என்றால், இவர்கள் சாப்பிட்டே சம்பாதிக்கின்றனர் என்றும் சொல்லலாம். சிலர் வீடுகளில், காடுகளில் சமைத்து சாப்பிடும் வீடியோக்களாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனர்.
அந்த வகையில் யூடியூபர் இர்ஃபான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான ஓட்டல்களில் சாப்பிடும் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர். பிறகு அவருக்கு வியூவர்ஸ் எண்ணிக்கை பல மில்லியன் அதிகரித்த நிலையில், பல ஓட்டல் நிர்வாகங்கள் அவரை தங்களது ஓட்டல்களுக்கு சாப்பிட அழைக்கும் சூழல் உருவானது.
இப்படி பெரிய அளவில் மக்களின் செல்வாக்கை பெற்ற இர்ஃபான், தன் மனைவி கர்ப்பமாக இருந்த போது அது ஆணா பெண்ணா என்பதை கூறி சர்ச்சையை கிளப்பி விட்டார். அவரே குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய சம்பவமும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஈத் பெருநாளில் ஏழை எளிய மக்களுக்கு ஆடைகள் பணம் மற்றும் உணவுகளை அவர் வழங்கிய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் இர்ஃபான் திட்டியதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக பிறகு இர்ஃபான் மன்னிப்பும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜோதி மல்கோத்ரா என்பவர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அந்த விவகாரத்தை தொடர்ந்து யூடியூபர்கள் மீதான விசாரணை அதிகரித்து வரும் நிலையில், யூடிபர்கள் இர்ஃபான் மற்றும் மதன் கெளரி ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் இர்ஃபான் பல வெளிநாடுகளுக்கு சென்று ஓட்டல்களில் தங்கி சாப்பிட்டு அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். அதே போல் மதன் கௌரியும் வெளிநாடுகளுக்கு செல்லும் ஒரு முக்கிய செலிபரட்டியாக இருந்து வருகிறார். அதனால் இர்ஃபான், மதன் கௌரி போன்றவர்களும் விரைவில் இந்த விவகாரத்தில் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.





