- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளாவில் நடந்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகர் - அந்த...

கேரளாவில் நடந்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகர் – அந்த விஷயத்தில் கறாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால சினிமா வாழ்வில் முதன்முறையாக தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று ரூ. 600 கோடிக்கு மேல் ஜெயிலர் படம் வசூலித்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான விலை உயர்ந்த லக்ஸரி கார்களை பரிசாக வழங்கினார்.

- Advertisement -

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ரம்யாகிருஷ்ணன் மோகன்லால் விநாயகன் சுனில் ரெடின் கிங்ஸ்லி யோகிபாபு வசந்த் ரவி சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் அறந்தாங்கி நிஷா சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த 2ம் பாகத்தில் இந்த நடிகர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்களும் நடிக்க உள்ளனர். ஜெயிலர் 2 படம் ஜெயிலர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் உருவாகிறது என சொல்லப்படுகிறது.

கடந்த மாதத்தில் கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த காட்சிகளை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் படமாக்கினார். பிறகு நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்து ஒரு வாரம் 10 நாட்கள் என ஓய்வில் இருந்தார்.

- Advertisement -

இப்போது மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடந்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார். இதற்கிடையே இப்போது நடிகர் யோகிபாபுவும் இந்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு ரஜினியுடன் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்திலும் ரஜினியுடன் யோகிபாபு நடித்திருந்தார்.

ஜெயிலர் முதல் பாகத்தில் சில காட்சிகளில் ரஜினியை கலாய்க்கும் விதமாக யோகிபாபு நடித்திருந்தது அப்போது ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தன்னை கலாய்க்கும் காமெடி காட்சிகள் கூடாது என ரஜினிகாந்த் அப்போதே மறுக்கவில்லை. ஒரு படத்துக்கு கதை எவ்வளவு முக்கியமோ காமெடியும் அந்த அளவுக்கு முக்கியம் என்று இயக்குனர்களிடம் ரஜினி சொல்வது வழக்கம். அதனால் ஜெயிலர் போலவே ஜெயிலர் 2 படத்திலும் காமெடி தரமாக பேசப்பட வேண்டும் என்பதில் ரஜினி கறாராக இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்