- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறையும் தள்ளிப்போகும் அயலான் திரைப்படம்... தீபாவளிக்கு ரீலிஸ் ஆகாததால் எஸ்.கே. ரசிகர்கள் துக்கம்... அப்படி...

இந்த முறையும் தள்ளிப்போகும் அயலான் திரைப்படம்… தீபாவளிக்கு ரீலிஸ் ஆகாததால் எஸ்.கே. ரசிகர்கள் துக்கம்… அப்படி என்னதாங்க பிரச்சினை…

- Advertisement -

டாக்டர், டான் திரைப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளியன்று ரிலீசானது. கார்த்தியின் சர்தார் படத்துடன் மோதிய இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும், ஒரு மாதிரியான படங்களில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நடிப்பதாக விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதையடுத்து தனது அடுத்த படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்த சிவகார்த்திகேயன், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வினுடன் சேர்ந்தார். இருவர் கூட்டணியில் விறுவிறுப்பாக உருவாகிய மாவீரன் திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி ரிலீசானது.

- Advertisement -

ஷங்கரின் மகள் அதிதி, சரிதா, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் நடித்த இந்த திரைப்படம், நல்ல வரவேற்ப்பை பெற்றது. யோகிபாபுவின் அட்டகாசமான காமெடியால் திரையரங்குகளில் சிரிப்பலை எழ, படத்தை மக்கள் தூக்கிவைத்து கொண்டாடினர். 30 கோடியில் உருவான இந்த திரைப்படம், சுமார் 80 கோடி ரூபாய் வசூல் அள்ளியது.

இதையடுத்து ரங்கூன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்துள்ள எஸ்.கே., ராணுவ பின்னணி தொடர்பான படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், சாய்பல்லவி ஹீரோயினாக நடிக்க, காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதனிடையே, சிவகார்த்திகேயன் – நேற்று இன்று நாளை இயக்குநர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி கிடப்பில் போடப்பட்ட அயலான் திரைப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏலியன் பூமிக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கதைக்களமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

இதன் சிஜி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற, அயலான் திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் ட்ரைலர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சிஜி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள எஸ்.கே. ரசிகர்கள், படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று இணையத்தில் பதவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்