- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஸ்வரூபம் எடுத்த ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து விவகாரங்கள் ; ரவி மோகன் ஆர்த்திக்கு கோர்ட்...

விஸ்வரூபம் எடுத்த ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து விவகாரங்கள் ; ரவி மோகன் ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

சினிமாவில் நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து என்பது தொடர்கதையாகி விட்டது. கமல் வாணி கணபதி கமல் சரிகா நளினி ராமராஜன் பார்த்திபன் சீதா தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜீவி பிரகாஷ்குமார் சைந்தவி ஏஆர் ரகுமான் சாயிரா பானு என இந்த வரிசையில் கடந்த ஆண்டில் ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவும் இணைந்து கொண்டது.

கடந்தாண்டில் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி பிறகு சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்தார். இந்த விஷயத்தில் தனது கணவர் ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டார். என்னிடம் ஆலோசிக்கவில்லை என்று அவரது மனைவி ஆர்த்தி விளக்கம் தந்திருந்தார்.

ஆனால் தன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் தன்னை கொடுமை செய்வதாகவும் சுதந்திரமின்றி தம்மை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் ஜெயம் ரவி புகார் கூறினார். மேலும் பாடகி மற்றும் ஹீலர் கெனிஷா தனது தோழி என்றும் ஆரம்பத்தில் ஜெயம் ரவி கூறியிருந்தார். இதற்கிடையே கடந்த வாரத்தில் தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் கெனிஷாவுடன் ஜெயம் ரவி ஜோடியாக பங்கேற்றார்.

இந்த விஷயம் விவகாரமாக மாறிய நிலையில் ஆர்த்தி அவரது அம்மா சுஜாதா விஜயகுமார் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அதற்கு பதிலடியாக நடிகர் ஜெயம் ரவியும் அறிக்கை வெளியிட்டார். இப்படி மாறி மாறி அறிக்கை போர் விட்டுக்கொண்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பாடகி கெனிஷாவுடன் சில பதிவுகளை செய்ய அது இன்னும் பிரச்னையை பெரிதாக்கியது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியிடம், மாதந்தோறும் தனக்கு 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக பெற்றுத் தர வேண்டும் என கோர்ட்டில் ஆர்த்தி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதற்கு வருகிற ஜூன் 12ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நடிகர் ஜெயம் ரவிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கணவரை பிரிந்தாலும் ஆர்த்தி ஜீவனாம்சம் கேட்கும் விஷயம் இணையத்தில் பேசு பொருளானது.

இந்த சூழலில் நடிகர் ஜெயம் ரவி, தன்னை பற்றி ஆர்த்தி மற்றும் மாமியார் ஆகியோர் அறிக்கை வெளியிடக் கூடாது, அவதூறு கருத்துகளை பரப்பக் கூடாது என கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து ஜெயம் ரவி, ஆர்த்தி இரண்டு தரப்புமே அறிக்கை வெளியிட கோர்ட் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்