- Advertisement -
Homeபொழுதுபோக்குஅழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்யும் மீன் நான், முதல்வராகும் ஆசையில் அரசியலுக்கு வரவில்லை -...

அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்யும் மீன் நான், முதல்வராகும் ஆசையில் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன் போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

நாயகன் படத்துக்கு பிறகு கமல் மணிரத்னம் இணைந்துள்ள படம் தக்லைஃப். ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்கு பின் இந்த மெகா கூட்டணி இணைந்திருக்கிறது. நாயகன் படத்தில் தேசிய விருது கிடைத்தது போல் தக்லைஃப் படத்திலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கமலுக்கு கிடைக்குமா, என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்த படத்தை பொருத்தவரை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற பெயரை தவிர நாயகன் படத்துக்கும் தக்லைஃப் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குனர் மணிரத்னம் கூறியிருக்கிறார். மேலும் நாயகன் படத்தின் தொடர்ச்சியாக தக்லைஃப் இருக்காது என்றும் கமல் ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

வருகிற ஜூன் 5ம் தேதி தக்லைஃப் படம் வெளியாக உள்ளது. தக்லைஃப் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் நடிகர்கள் கமல் சிம்பு இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, தம்பி எஸ்டிஆர் போகப் போகும் தூரம் எனக்கு தெரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்த கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த ரெஸ்பான்ஸ்பிலிட்டி உடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள். இது சுமை அல்ல சுகம்.

- Advertisement -

நான் சீப் மினிஸ்டர் ஆகுறதுக்கு ஒண்ணும் வரல. எம்பி எம்எல்ஏ எல்லாம் எனக்கு புரியாது. ஆனால் 40 வருஷமா ஒரு எம்எல்ஏ ஒரு தொகுதிக்கு என்ன பண்ணுவாரோ அதை நாங்கள் மெதுவாக பண்ணிக்கிட்டே இருக்கோம். ஏனென்றால் நாங்கள் தனி மனிதர்கள்.

இங்கிருந்து என்கூட உழைத்த தம்பிகள் எல்லாம் பெரிய மனிதர்களாக சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது எனக்கு பெருமை. கலைஞர் டயலாக் சொன்னது போல் பாட்டு ஒலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படம் எடுத்தாடும் பாம்புகள் நிறைந்திருக்கின்றன. அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்யும் மீன். அதைப் போல நானும் என்று நடிகர் கமல்ஹாசன் ஓபனாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்