- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவி மோகன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன நடிகர் சிம்பு...

நடிகர் ரவி மோகன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன நடிகர் சிம்பு – ஆனா இப்படி ஒரு சிக்கல் இருக்குதே…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இவர் எடிட்டர் மோகனின் மூத்த மகன். இவரது தம்பிதான் ஜெயம் ரவி என்கிற சமீபத்தில் பெயர் மாற்றம் செய்துக்கொண்ட ரவி மோகன். தனது தம்பியை இயக்குனர் மோகன் ராஜா அறிமுகப்படுத்திய படம்தான் ஜெயம். இதன்பிறகு ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டார்.

மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தனி ஒருவன் உனக்கும் எனக்கும் சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர். குறிப்பாக தனி ஒருவன் படம் பெரிய அளவில் மாஸ் ஹிட்டாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்த படம். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்திருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்தார். நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். நாசர் தம்பி ராமையா மற்றும் வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருந்தனர். தனி ஒருவன் 2 படம் எப்போது வரும் என தமிழ் சினிமா ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர். அந்த படம் கண்டிப்பாக வரும் என இயக்குனர் மோகன் ராஜாவும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உறுதியளித்திருக்கிறார்.

இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன் நயன்தாரா பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் அடுத்த படம் இயக்க வாய்ப்பின்றி மோகன்ராஜா இருந்து வருகிறார். திறமையான ஒரு இயக்குனர் இப்படி 8 ஆண்டுகளாக படம் இயக்காதது பெரிய ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தனி ஒருவன் 2 படம் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்த இயக்குனர் மோகன்ராஜா ஒரு கதை சொல்லி இருக்கிறார்.

அந்த கதை மிகவும் பிடித்துப் போய்விட்டதால் நிச்சயமாக இந்த படம் நாம் பண்ணுவோம் என்று சிம்பு உறுதியளித்திருக்கிறார். ஏற்கனவே எஸ்டிஆர் 49 படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக இருந்தது. அமலாக்கத்துறை விசாரணை காரணமாக அவர் தலைமறைவாகி விட்டதால், அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளரை சிம்பு தேடி வருகிறார். இப்போது மோகன்ராஜா இயக்கும் தனது புதிய படத்துக்கும் தயாரிப்பாளரை சிம்பு தேடி வருகிறார். விரைவில் தயாரிப்பாளர் கிடைப்பாரா என்பதில் சிம்புவுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்