- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி படங்களில் அப்படி ஒரு விஷயம் இருக்கிறது… நடிகை அபிராமி சொன்ன தகவல் - இப்படி...

ரஜினி படங்களில் அப்படி ஒரு விஷயம் இருக்கிறது… நடிகை அபிராமி சொன்ன தகவல் – இப்படி ஒரு ஆசையும் அவருக்கு இருக்கிறதா?

- Advertisement -

கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிராமி. மலையாளத்தில் சில படங்களில் நடித்த பிறகு தமிழில் வானவில் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து சரத்குமாருடன் சமுத்திரம், சமஸ்தானம், கமல்ஹாசனுடன் விருமாண்டி பிரபுவுடன் பட்ஜெட் பத்மநாபன் மற்றும் சார்லி சாப்ளின் கார்மேகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டரில் அபிராமி நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து நடிகை அபிராமி திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகள் வரை அவர் சினிமாவில் நடிக்கவில்லை. பிறகு மீண்டும் மாதவன் நடித்த மாறா படத்தில் அபிராமி ரி என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இப்போது அபிராமி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். வேட்டையன் தக்லைஃப் லெவன் சரிபோதா சனிவாரம் தம்பி பாம் அசுரன் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அபிராமி கூறியதாவது, நான் ரஜினி சார் படங்களில் நடிக்க மிகவும் ஆசைப்படுவேன். அவருடன் ஸ்ரீதேவி நடித்த படம் எதுவாக இருந்தாலும் அந்த கேரக்டரில் நடிக்க எனக்கு சம்மதம்தான். ரஜினி படம் என்றாலே போதும். அவருடன் எந்த கேரக்டரிலும் நடிக்க எனக்கு ஆசைதான்.

- Advertisement -

குறிப்பாக சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டர் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் போன்றவை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களாக இருந்தன. ரஜினி படங்களில் எப்போதுமே பெண்களுக்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் இருக்கும். இந்த விஷயத்தை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.

அதனால் ரஜினி படம் என்றாலே போதும். நான் அவருடன் நடிக்க தயாராக இருக்கிறேன். தளபதி படத்தில் ஷோபனா நடித்த கேரக்டர் எல்லாம் எனக்கு கிடைத்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன். ரஜினி படத்தில் எந்த கேரக்டர் என்றாலும் நான் நடிக்க தயாராக இருப்பேன். அதனால் அவரது படத்தில் எந்த கேரக்டரில் நடிப்பது என்றாலும் எனக்கு ஓகே தான் என்று நடிகை அபிராமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்