- Advertisement -
Homeபொழுதுபோக்குசூரி நடித்த கருடன் படத்துக்கு தெலுங்கிலும் பெரிய வெற்றி கிடைக்குமா, வரும் 30ம் தேதி பைரவம்...

சூரி நடித்த கருடன் படத்துக்கு தெலுங்கிலும் பெரிய வெற்றி கிடைக்குமா, வரும் 30ம் தேதி பைரவம் படம் ரிலீஸ் – மாமன் படம் தெலுங்குக்கு போகவும் வாய்ப்பு?

- Advertisement -

நடிகர் சூரி நாயகனாக அறிமுகமான விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த படம் கருடன். கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படம் பெரிய வெறறியை பெற்றது. ரூ. 50 கோடிக்கு மேல் இந்த படம் வசூலை குவித்தது.

நடிகர் சசிக்குமார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்த இந்த படத்தில் சொக்கன் என்ற கேரக்டரில் சூரி நடித்திருந்தார். சசிக்குமாருக்கு மனைவியாக நெடுஞ்சாலை பட நாயகி ஷிவதா நடித்திருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் வெளியான கருடன் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

- Advertisement -

கருடன் படத்தில் விசுவாசம் மிக்க வேலைக்காரன் கேரக்டரில் நடிகர் சூரியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தனது கணவர் சசிக்குமார் கொல்லப்பட்ட பிறகு நடிகை ஷிவதா அவரது கொலைக்காக நியாயம் கேட்டு அழும் காட்சிகளில் படத்தின் திரைக்கதை வலுவாக அமைந்திருந்தது.

நடிகர் சூரி நடித்த கருடன் படத்தை தெலுங்கில் பைரவம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படம் வருகிற 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் மஞ்சு மனோஜ் நர ரோகித் அதிதி சங்கர் கயல் ஆனந்தி ஜெயசுதா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

தமிழில் வெளிவந்த கருடன் படம் 50 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கிராமத்து பின்னணியில் நட்பு துரோகம் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய மிகவும் பொருத்தமான ஒரு படம் தான் கருடன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் கருடன் படத்தை தெலுங்கில் ரீ மேக் உரிமை வாங்கி படத்தை எடுத்து முடித்து இந்த வாரம் பைரவம் என்ற டைட்டிலில் ரிலீஸ் செய்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தமிழில் கருடன் படத்துக்கு கிடைத்த அபார வெற்றியைப் போலவே தெலுங்கிலும் பைரவம் படத்துக்கு பெரிய வரவேற்பும் வெற்றியும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை பைரவம் படம் பெரிய வரவேற்பை பெற்றால், தமிழில் மாஸ் ஹிட் ஆன மாமன் படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்