- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் ராஜேஷின் ஆசைகள்… 2 நாட்களுக்கு முன் எங்கு சென்று...

கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் ராஜேஷின் ஆசைகள்… 2 நாட்களுக்கு முன் எங்கு சென்று திரும்பியிருக்கிறார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் 75 வயதான நடிகர் ராஜேஷ் இன்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு தீபக் திவ்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில்தான் அவரது மனைவி ஜோன் சில்வியா காலமானார். சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகர் ராஜேஷ் சமீபமகாலமாக ஆன்மிகம் மருத்துவம் ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

நடிகர் ராஜேஷை பொருத்த வரை எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர். குறிப்பாக சினிமா துறையில் இருக்கும் நடிகர்களுக்கு மதுப்பழக்கம் புகைப்பழக்கம் போன்றவை மிக சாதாரணமாகவே இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இதுபோன்ற தீய பழக்கங்களை ராஜேஷ் தவிர்த்தவர். நடிகர் ஆவதற்கு முன்பே அவர் ஒரு ஆசிரியர் என்பதால் அந்த நல்ல ஒழுக்கங்கள் அவரிடம் இயல்பிலேயே இருந்திருக்கலாம்.

- Advertisement -

நடிகர் ராஜேஷ் குறித்து பலரும் அறியாத ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் அவர் ஒரு மிக தீவிரமான வாசிப்பாளர். எப்போதும் புத்தகங்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். அதே போல் அவரது கணீர் குரலை அவர் நடித்த படங்களில் மட்டுமே பயன்படுத்தாமல் பல நடிகர்களுக்கு அவர் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராஜேஷ் இன்று காலை இறந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்புதான் அவர் துபாயில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் கட்டுமான கலை சார்ந்த தொழில்களில் அவர் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த நிலையில் பிஸினஸ் சார்ந்த ஒரு பயணமாக துபாய் சென்றுவிட்டு 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ராஜேஷின் மகன் தீபக், 35 வயதுகளை கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. வருகிற ஜூன் 6ம் தேதி அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்திருக்கிறது. பட்டுக்கோட்டையில் ஒரு கிராமத்தில் இருந்து பெண் பார்த்து சமீபத்தில் முடிவு செய்திருக்கின்றனர். உனக்கு திருமணம் செய்து வைத்து ஒரு வாழ்க்கை அமைத்து தராமல் இந்த உலகத்தை விட்டு போக மாட்டேன் என்று பலமுறை தனது மகனிடம் ராஜேஷ் உறுதியாக சொல்லி இருக்கிறார்.

ஆனால், காலத்தின் கோலம் மகன் திருமண நிச்சயதார்தத்துக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் ராஜேஷ் மகனின் திருமணத்தை நடத்தாமலேயே திடீரென ராஜேஷ் மறைந்து விட்டார். அதே போல் நடிகர் ராஜேஷ் மகன் ஹீரோவாக ஆசைப்பட்டு சமீபத்தில்தான் ஒரு இயக்குனரை பிடித்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். தனது மகனை திரையில் ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட நடிகர் ராஜேஷின் 2வது ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

- Advertisement -

சற்று முன்