- Advertisement -
Homeபொழுதுபோக்குகுபேரா பட விழா மேடையில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கியமான அப்டேட் கொடுத்த...

குபேரா பட விழா மேடையில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கியமான அப்டேட் கொடுத்த தனுஷ்… லேடி சூப்பர் ஸ்டாரையும் சைலண்டா வச்சு செஞ்சிட்டாரே…

- Advertisement -

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு குபேரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாத்தி படத்திற்கு பிறகு அவர் நேரடியாக நடிக்கும் இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக இது அமைந்துள்ளது. நாகர்ஜுனா ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

இதில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அண்மையில் படத்திலிருந்து வெளியான டிரைலர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக அதில் எனது எனப் பாடும் தனுஷின் குரலும் ரசிகர்களை ஈர்த்தது. இந்த நிலையில் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

இதில் தனுஷ் பேசியதாவது, இது மிகவும் முக்கியமான திரைப்படம். உலகத்திற்கே இந்த திரைப்படம் தேவை. குபேரா படத்தின் மீது நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். சேகர் கமுலா வானில் இருந்து வந்த ஒரு வெள்ளை தேவதை. நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் வதந்தியை பரப்புங்கள்.

நெகட்டிவிட்டியை பரப்புங்கள். ஒவ்வொரு முறையும் எனது திரைப்படத்திற்கு எதிராக நெகட்டிவிட்டி பிரச்சாரத்தை செய்யுங்கள். என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தீப்பந்தம் போல் எரிந்து கொண்டிருக்கும் வரை நான் சென்று கொண்டே இருப்பேன். தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா. இந்த சர்க்கஸ்லாம் வேண்டாம்.

- Advertisement -

நீங்கள் சும்மா ஒரு நாலு வதந்தியை பரப்பி என்னை காலி பண்ணி விடலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இங்கு எதுவும் கிடையாது. ஒரு செங்கல்ல கூட உங்களால ஆட்ட முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை. நான் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட இல்லாம இங்க கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். எந்த நிலைமையில் இருந்தாலும் நான் சந்தோஷமாகத்தான் இருப்பேன்.

2018 ஆம் ஆண்டு வடசென்னை படம் வந்ததிலிருந்து அதன் இரண்டாம் பாகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது சொல்கிறேன் அடுத்த ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நயன்தாராவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் அவர் இப்படி பேசி இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்