- Advertisement -
Homeபொழுதுபோக்குஆனந்த சுதந்திரம் அடைந்தது இந்தியா - கடந்த 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டு மக்களுக்கு...

ஆனந்த சுதந்திரம் அடைந்தது இந்தியா – கடந்த 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டு மக்களுக்கு அறிவித்தவர் வேறு யாருமல்ல, இந்த தமிழ் நடிகர்தான்!

- Advertisement -

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவுக்கு 78 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. அண்ணல் காந்திஜியும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜவஹர்லால் நேரு இராஜாஜி உள்ளிட்ட அப்போதைய அரசியல் தலைவர்களும் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தனர். கடந்த 78 ஆண்டுகளாக சுதந்திர இந்தியாவில் மக்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். அவரது குரலே ஒரு தனித்துவம் மிக்கதாக இருக்கும். எல்லா படங்களிலுமே அவர் அப்பா கேரக்டர்களில்தான் பெரும்பாலும் நடித்திருக்கிறார். ஒரு கண்ணியமான அப்பா தோற்றத்தில் அவரை விட்டால் அப்போது நடிக்க ஆளில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆண்பாவம் தில்லு முல்லு ஆசை அஞ்சலி மௌன ராகம் தங்கமகன் காதல் பரிசு பயணங்கள் முடிவதில்லை புதுக்கவிதை கேளடி கண்மணி படிக்காதவன் ராணுவவீரன் விதி அபிமன்யு வேடிக்கை என் வாடிக்கை ராஜா கைய வெச்சா கோபுர வாசலிலே அர்ச்சனை பூக்கள் மூன்றாம் பிறை வறுமையின் நிறம் சிவப்பு மகாநதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் பூர்ணம் விஸ்வநாதன்.

குறிப்பாக ஆண்பாவம் படத்தில் பள்ளி ஆசிரியராக ரேவதியின் அப்பாவாக நடித்திருப்பார். அதே போல் மூன்றாம் பிறை படத்தில் சில்க் ஸ்மிதாவின் வயதான கணவராகவும் நடித்திருப்பார். தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு கார்டியனாகவும் அவர் நடித்திருப்பார். ஆசை படத்தில் மருமகன் பிரகாஷ் ராஜை நம்பி ஏமாறும் ஒரு மாமனார் கேரக்டரில் சிறந்த நடிப்பை தந்திருப்பார்.

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்த வரை ஒரு பெருமைமிகு குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் பூர்ணம் விஸ்வநாதன். அவர் தனது 24வது வயதில் டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி மையத்தில் அவர் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்தார். அப்போது வானொலி செய்திகள் மூலம்தான் மக்கள் நாட்டு நடப்புகளை தெரிந்துக்கொள்ளும் வசதி இருந்தது.

கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அந்த மகிழ்ச்சியான செய்தியை ஆனந்த கண்ணீரோடு ஆல் இந்தியா ரேடியோ வானொலியின் மூலம் முதன் முதலில் நாட்டு மக்களுக்கு அறிவித்த பெருமை பூர்ணம் விஸ்வநானையே சேரும். அவர்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அந்த தகவலை ஒரு செய்தி வாசிப்பாளராக இந்திய மக்களுக்கு அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் அவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மக்கள் மனங்களில் நின்றார்.

- Advertisement -

சற்று முன்