தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஒரு பெரிய நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெறுவதற்கு பல ஆண்டுகாலம் போராட வேண்டிய சூழல் இருக்கும். பல வெற்றிப் படங்களை தர வேண்டும். அப்போதுதான் முன்னணி நட்சத்திர ஹீரோக்களை வைத்து படம் இயக்க முடியும்.
ஆனால் இப்போது அப்படியல்ல. ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் அந்த இயக்குனரை தேடி பெரிய ஹீரோக்களே எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்க என்று வந்து விடுகின்றனர். ஏனென்றால் இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றிப்படம் தருவது என்பது அவ்வளவு குதிரை கொம்பாக மாறிவிட்டது.
ஏனென்றால் சரக்கு இல்லாத இயக்குனர்கள் ஹீரோக்களை நம்பியும் வேறு மொழி படங்களில் இருந்து காப்பியடித்த கதைகளை நம்பியும் படங்களை எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படி ஜெராக்ஸ் கடை மன்னர்களுக்கு மத்தியில் நல்ல படம் தரும் இயக்குனர்கள் ஹீரோக்களுக்கு பெரிய படைப்பாளியாக தெரிகின்றனர்.
அந்த வரிசையில் ஓ மை கடவுளே டிராகன் ஆகிய 2 படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இதில் டிராகன் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்ததால் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே சொந்தமாக தயாரிக்கிறார் என்பது இன்னும் கூடுதல் சிறப்பாகும்.
இதற்கிடையே இப்போதைய அரசியல் தலைவர்கள் உலக தலைவர்கள் விஞ்ஞானிகள் நடிகர்கள் என பலரது வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுப்பது பேஷனாகி வருகிறது. ரஜினிகாந்த் ஜிடி நாயுடு அப்துல் கலாம் இளையராஜா என சிலரது பயோகிராஃபி படங்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது, நான் ஒரு வேளை முதலமைச்சர் விஜய் சாருடைய வாழ்க்கையைப் பற்றி திரைப்படமாக எடுக்க நினைத்தால் நெஞ்சில் குடியிருக்கும்… என்றுதான் படத்தின் டைட்டிலை வைப்பேன் என்று அந்த நேர்காணலில் அஸ்வத் மாரிமுத்து கூறியிருக்கிறார்.





