தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நட்சத்திர இயக்குனராக வலம் வந்தவர் ஷங்கர். அவரது படங்கள் என்றாலே மிக பிரமாண்டமாக இருக்கும். அதனால் 30 ஆண்டுகளுக்கு முன்பே பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் ஷங்கருக்கு இருந்தது. எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து காதலன் பாய்ஸ் முதல்வன் அந்நியன் இந்தியன் நண்பன் சிவாஜி எந்திரன் ரோபோ 2.0 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷங்கர். கடைசியாக அவர் இயக்கிய இந்தியன் 2 படமும் கேம் சேஞ்சர் படமும் பெரிய வெற்றியை பெறாமல் தோல்வியடைந்தது.
ஷங்கரின் படம் என்றாலே வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த 2 படங்களும் தந்த மோசமான தோல்வி அவரது சினிமா எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிவிட்டது. ஒரு காலத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும், ஷங்கர் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டிய யாருமே இப்போது அவரை கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே வேள்பாரி என்ற வரலாற்று நாவலை திரைப்படமாக உருவாக்க ஷங்கர் முனைப்பு காட்டி வருகிறார். ஆனால் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3 பாகங்களாக உருவாகும் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாருமே முன்வர மறுக்கின்றனர். இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் ஷங்கர் மீதான நம்பிக்கை மறைந்து போய்விட்டது.
இந்த சூழலில் வேள்பாரி முன்னதாக ஒரு குறுகிய கால படைப்பாக ஒரு சூப்பர் ஹிட் படத்தை தந்தால் பழைய ஃபார்முக்கு வந்துவிடலாம் என்று ஷங்கர் கருதுகிறார். அதற்காக பல நடிகர்களை சந்தித்து பேசி வருகிறார். ஆனால் அவரது படத்தில் நடிக்க யாரும் ஓகே சொல்லாமல் தவிர்க்கின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷை சந்தித்து இயக்குனர் ஷங்கர் பேசியிருக்கிறார்.
அவரும் நேரடியாக நோ என்று சொல்லாமல், கமிட் ஆன படங்களில் நடித்து முடித்த பிறகு பார்க்கலாம் என்று கூறி மழுப்பியிருக்கிறார். இப்போது அரசியல் ஆசையில் உள்ள தனுஷ், இனிமேல் இறுக்கமான முகம் கொண்ட கேரக்டரில் நடிக்காமல் சந்தோஷமான ஜாலியான கேரக்டரில் நடிக்கும் முடிவில் இருக்கிறார். ஒருவேளை ஷங்கர் சொன்ன கதையில் ஜாலியான தனுஷ் இல்லாததால் அவர் மறுத்து விட்டாரா என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.





