நடிகர் யோகிபாபு பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். மண்டேலா கூர்கா தர்மபிரபு போட் பொம்மை போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதில் மண்டேலா படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இளிச்சவாயன் என்ற கேரக்டரில் மரத்தடி சலூன் பார்பராக யோகிபாபு நடித்திருந்தார்.
சூரி சந்தானம் என காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறிய நிலையில் நடிகர் யோகிபாபு பல படங்களில் காமெடி ரோலிலும் சில படங்களில் மட்டும் முக்கிய கேரக்டரில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். எனினும் காமெடி ஹீரோ என 2 விதங்களிலுமே அவர் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிப்பை தந்து வருகிறார்.
ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் இப்போது யோகிபாபு நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் உதயா அஜ்மல் நடித்துள்ள அக்யூஸ்ட் என்ற படத்திலும் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். யோகிபாபு பட விழாக்களுக்கு வருவதில்லை என்ற புகார் எழுந்த நிலையில், அக்யூஸ்ட் பட விழாவில் வீடியோ காலில் யோகிபாபு பேசியது வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்தில் சில காட்சிகளில் நடிகர் யோகிபாபு ரஜினியை சில டயலாக் பேசி கலாய்த்து இருப்பார். அதற்கு பழிவாங்கும் விதமாக ஜெயிலர் 2 படத்தில் யோகிபாபுவை நான் அதிகமாக கலாய்க்கும் விதமான காட்சிகள் வேண்டும். இந்த முறை யோகிபாபுவை ரிவென்ஞ்ச் எடுக்காமல் விட மாட்டேன் என்று ரஜினியே, இயக்குனர் நெல்சனிடம் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் யோகி பாபு கூறியதாவது. இயக்குனர் சுந்தர் சி தான் ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்து சேர்த்தார். எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஐடியா கிடையாது. ஆனால் நான் நன்றாக வசனங்கள் எழுதுவேன்.
தமிழ் சினிமா எழுத்தாளர் சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். அதனால் கதைகள் எழுதி தயாராக வைத்திருக்கிறேன். ஆனால் படங்களை இயக்க நான் விரும்பவில்லை. சினிமாவில் உதவி இயக்குனராக வேண்டும் என்றுதான் விரும்பினேன். ராம்பாலா சார் தான் என்னை நடிகனாக மாற்றினார் என்று அந்த நேர்காணலில் நடிகர் யோகி பாபு கூறியிருக்கிறார்.





