நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன், இவருக்கு எஸ்டிஆர் என்ற பெயரும் உண்டு. கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குநராக, நடிகராக, சிறந்த பாடல்களை, கதைகளை கொண்ட படங்களை தந்த டிஆர் எனப்படும் டி. ராஜேந்தர் மகன் என்ற பெருமையும் சிம்புவுக்கு உண்டு.
இதை விட முக்கியமான விஷயம், இவர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். கால்ஷீட் தந்த தேதிகளில் ஷூட்டிங் வராமல் காணாமல் போய்விடுவார். அந்த நேரத்தில் அவரை தொடர்புகொள்ளவும் முடியாது. இப்படி தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை பாடாய்படுத்தியவர் என்ற விமர்சனங்கள் சிம்பு மீது இருந்தது.
இதேேபால் கடந்த 1980, 90களில் இருந்தவர்தான் அன்றைய முன்னணி ஹீரோ நடிகர்களின் முக்கியமானவரான நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அழைக்கப்பட்ட இவர், நடிகர் முத்துராமன் மகன் என்ற சிறப்புக்குரியவர். ஏனெனில் முத்துராமன், தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக, மனிதராக வலம்வந்தவர். அதேபோல் கார்த்திக், மிக இயல்பான சிறந்த நடிகர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் கார்த்திக், அதிக மதுப்பழக்கம் கொண்டவர். சக நடிகைகளுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தார். இவர் மீது இருந்த மிக முக்கிய குற்றச்சாட்டு, கால்ஷீட் தருவார், ஆனால் அந்த நாட்களில் படப்பிடிப்பு தளத்துக்கு வராமல், ஓட்டலிலேயே இருந்து விடுவார். தயாரிப்பாளர், இயக்குநர் யார் பேச்சையும் கண்டுகொள்ளவே மாட்டார்.
இந்நிலையில், சோலைக்குயில் படம் ஊட்டியில் எடுக்கப்பட்ட போது, அந்த படத்தில் நடித்த ராகினி என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார். அடுத்த சில ஆண்டுகளில் அவரது தங்கையையும் கார்த்திக்கே, 2வது திருமணமும் செய்துகொண்டார். பல ஆண்டுகளுக்கு பின்பே, இந்த உண்மை வௌிச்சத்துக்கு வந்தது.
ஒரு கட்டத்தில் இதுகுறித்த கடும் விமர்சனம் எழுந்த போது, என் முதல் மனைவியின் சம்மதத்துடன்தான், அவரது தங்கையை 2வது திருமணம் செய்துகொண்டதாக கூறிவிட்டார் கார்த்திக். இப்போதும் கார்த்திக், மகன் கவுதம் கார்த்திக் வாழ்க்கையில் அதிக அக்கறை, ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை. நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்த கவுதம் கார்த்திக், தனது திருமண ஏற்பாடுகளை கூட அவரே தான் செய்துக்கொண்டார். அவரது தந்தை கார்த்திக் எந்த விதத்திலும் அவருக்கு பக்கபலமாக இருந்ததாக தெரியவில்லை என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.





