நடிகர் தனுஷ் நடித்த மிக முக்கியமான படங்களில் ஒன்றுதான் வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் போன்ற படங்களில் தனுஷ் நடித்திருக்கிறார். அதே போல் அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படம் மிக முக்கியமான ஒன்று. இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டில் வெளியான வடசென்னை படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாகவும் அமீர் சமுத்திரக்கனி டேனியல் பாலாஜி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆண்ட்ரியா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். நடிகர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் லைகா புரடக்சன்ஸ் இந்த படத்தை இணைந்து தயாரித்திருந்தது.
இது வடசென்னை பகுதியில் வாழும் மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு கதைக்களத்தில் உருவாகி இருந்தது. பெரிய வரவேற்பை வெற்றியை இந்த படம் பெற்ற நிலையில், வடசென்னை 2ம் பாகம் குறித்து வெற்றிமாறன், தனுஷ் இருவருமே 6 ஆண்டுகளாக பேசி வந்தனர். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வடசென்னை 2ம் பாகத்தை விரைவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். ஆனால் இந்த படத்தின் நாயகன் தனுஷ் கிடையாது. வடசென்னை 2ம் பாகத்தில் நாயகனாக நடிக்கப் போவது நடிகர் சிலம்பரசன்தான் என்பது உறுதியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் தனுஷை நேரில் சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன், வடசென்னை 2ம் பாகத்தை எடுக்க உள்ளேன், நாயகன் சிம்பு என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஓகே சொன்ன தனுஷ், தாராளமாக பண்ணுங்க என்று மனதில் இருந்த வருத்தத்தை மறைத்துக்கொண்டு மிக சாதாரணமாக கூறியிருக்கிறார். அதனால் இயக்குனர் வெற்றிமாறன், வடசென்னை 2ம் பாகத்தை தனுஷூக்கு பதிலாக சிம்புவை வைத்து டைரக்ட் செய்யப் போவது உறுதியாகி விட்டது.
அதனால்தான் குபேரா படம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், வடசென்னை 2ம் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் இதில் மற்றொரு முக்கிய தகவல் என்னவென்றால், வடசென்னை முதல் பாகத்திலேயே முதலில் நடிக்க இருந்தது சிம்புதான். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போன பிறகுதான் அதில் நடிகர் தனுஷ் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





