நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினி லோகேஷ் முதன்முறையாக இணைந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் இந்தி நடிகர் அமீர்கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்கள் எல்லாமே அந்தந்த மொழியில் ஸ்டார் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். ஜெயிலர் படத்தில் தமன்னா நடனத்தில் வெளிவந்த காவலய்யா பாடல் போல கூலி படத்தில் இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் ரஜினியும் இணைந்து ஆடியிருப்பதாக கூறப்படுகிறது.
இப்போதெல்லாம் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களை பான் இந்தியா படங்களாக தயாரிக்க காரணமே தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என மற்ற மொழிகளிலும் அந்த படங்கள் கணிசமாக வசூலிக்க அங்குள்ள முன்னணி நடிகர்களை நடிக்க வைப்பது வழக்கமாகி வருகிறது.
இதே பார்மூலாவை பின்பற்றி மலையாளத்தில் தெலுங்கில் கன்னடத்தில் இந்தியில் உருவாகும் படங்களிலும் தமிழில் உள்ள நட்சத்திர நடிகர்கள் நடிக்க வைக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கூலி படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் தான் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தனது கேரக்டர் குறித்து அமீர்கான் தற்போது பேசியிருக்கிறார்.
கூலி படம் குறித்து சில தினங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறுகையில், கூலி படத்தில் வரும் எனது கேரக்டர் மிகவும் சுவாரசியமானது. என்னுடைய கேரக்டர் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் நிச்சயம் ரஜினிக்கு ஆதரவாக உள்ள ஒரு கேரக்டரில்தான் அவர் நடித்திருப்பார். அவர் வில்லனாக இருக்க வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





