- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது ஒரு திறந்தவெளி கழிப்பறை மாதிரி இருக்கு… குப்பையை கொட்டி கிறுக்கு பிடிக்க வைக்கிறாங்க -...

அது ஒரு திறந்தவெளி கழிப்பறை மாதிரி இருக்கு… குப்பையை கொட்டி கிறுக்கு பிடிக்க வைக்கிறாங்க – ஆவேசமாக பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சமுத்திரக்கனி. ஆரம்பத்தில் இயக்குனர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நாடோடிகள் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார்.

சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகராகவும் சமுத்திரக்கனி வரவேற்பை பெற்றார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கியமான ஒரு நடிகராக இயக்குனர் சமுத்திரக்கனி மாறியிருக்கிறார். அப்பா சாட்டை போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்குனர் சமுத்திரக்கனி தந்திருக்கிறார்.

- Advertisement -

ஹீரோ வில்லன் குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் சமுத்திரக்கனி ஸ்கோர் செய்து விடுகிறார். மாசு என்கிற மாசிலாமணி ரஜினி முருகன் பாயும் புலி போன்ற படங்களில் அவரது வில்லன் நடிப்பும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நல்ல படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தர வேண்டும் என்ற அக்கறை கொண்ட இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். அவ்வப்போது நல்ல சிந்தனைகளை பொதுவெளியில் பேசி வருகிறார். தீவிர புத்தக வாசிப்பாளராக இருக்கிறார். அதனால் நூல்கள் வாசிப்பு மற்றும் புத்தக கண்காட்சிகளிலும் சமுத்திரக்கனி ஆர்வமாக கலந்துக் கொள்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணல் பங்கேற்ற இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது, கொஞ்ச நாளா போன் இல்லாம ஒரு வாழ்க்கையை வாழனும்ன்னு இருக்கேன். ஒரு நாளைக்கு காலையில அரை மணி நேரம் பார்ப்பேன். அது சம்பந்தமாக யார் கூடவாவது பேசணும்னா பேசுவேன். மறுபடியும் மாலை அதே மாதிரி அரை மணி நேரம் போன் பார்த்துட்டு முக்கியமான விஷயம் என்றால் பேசறது, இல்லையென்றால் விட்டுவிடுவேன்.

சோசியல் மீடியா ஒரு திறந்தவெளி கழிப்பறை மாதிரி ஆயிடுச்சு. எல்லாரும் குப்பையை வந்து கொட்டிட்டு போயிடறாங்க. அதை நம்ம மண்டையில ஏற்றி கிறுக்கு ஆக்குறாங்க. சோசியல் மீடியாவில் நம்மை சீர்படுத்துகிற விஷயங்கள் 10 சதவீதம்தான் இருக்கு. நம்மை சீரழிப்பது தான் 90 சதவீதம் இருக்கு என்று இயக்குனர் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்