நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வெற்றிப் படங்களை கொடுத்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டில் வெளியான ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த குபேரா படம் நேற்று வெளியாகி உள்ளது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், முதல் நாளில் ரூ. 25 கோடி வரை வசூலித்திருக்கிறது.
இதற்கிடையே நடிகர் தனுஷ், குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பேசியது இணையத்தில் தொடர்ந்து ட்ரோல் ஆகி வருகிறது. தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க, என் ரசிகர்கள் தீப்பந்தங்களாக எனக்கு இருக்காங்க. அவங்க என் கம்பேனியன்ஸ், ஒரு செங்கங்லை கூட ஆட்ட முடியாது என நடிகர் தனுஷ் பேசியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஜய் போன்றவர்கள் இதுபோல் பேசியிருந்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் சினிமாவில் அவர்கள் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள். பலவிதங்களிலும் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவர்கள். அவர்கள் அப்படி பேசினால் அதில் பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் நடிகர் தனுஷ் இப்படி பேசியது பலரையும் கடுப்படைய வைத்திருக்கிறது. இதுகுறித்து ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, உலகை உலுக்கி வரும் திட்டமிட்ட சதிகள், உக்ரைனுக்கு எதிராக ஷியா சதி, ஈரானைத் தகர்க்க இஸ்ரேல் சதி.
தனுஷை வீழ்த்த மூக்குத்தி அம்மணி சதி, திடீர் தளபதியை பொளக்க சுள்ளான் சதி, சுள்ளானை சுருட்டி வீச லிட்டில் சூப்பர் ஸ்டார் சதி, சூர்யாவை பொசுக்க பலதரப்பு சதி, கமலை நசுக்க தலீவர் ஃபேன்ஸ் சதி மொக்கை படங்களை எடுத்து இவங்களுக்கு எதிரா இவங்களே சதி செஞ்சுக்க வேண்டியது, பழியை தூக்கி ஊருல இருக்கறவன் மேல போட வேண்டியது.
தொடர்ந்து காட்டு மொக்கை படங்களை தந்து படம் பார்க்க வர்றவங்களுக்கு எதிராக நீங்கதான் திட்டமிட்டு சதி செஞ்சுட்டு வர்றீங்க. உருப்படியா படம் எடுக்கறதை விட்டுட்டு திட்டமிட்ட சதி வட்டமிட்ட விதியின் உருட்டிட்டு திரியாதீங்க. ஆதாரம் இருந்தா கோர்ட்ல வழக்கு போடுங்க. டப்பா படத்தை எடுத்துட்டு இப்படி சென்டிமென்ட் பிட் எல்லாம் போட்டா மக்கள் ஏமாறவே மாட்டாங்க. தொடர்ந்து தோத்து விட்டு தான் இருப்பீங்க ஸ்டாப் யுவர் சிரிஞ்ச் சிம்பதி சீக்கிங் ஸ்பீச்சஸ் என்று ப்ளு சட்டை மாறன் அந்த பதிவில் கலாய்த்திருக்கிறார்.





