- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு படங்களே இல்லே, அந்த விஷயத்தை சொல்லி எனக்கு நடிக்க வாய்ப்பு தர மாட்டேங்கறாங்க -...

எனக்கு படங்களே இல்லே, அந்த விஷயத்தை சொல்லி எனக்கு நடிக்க வாய்ப்பு தர மாட்டேங்கறாங்க – வருத்தப்பட்டு பேசிய லவ்டுடே பட நாயகி இவானா!

- Advertisement -

முன்பெல்லாம் பல படங்களில் நடித்தால்தால் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்திருப்பதும் சாத்தியமாகும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு ஹிட் படத்தில் நடித்து விட்டாலே அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளமும் வரவேற்பும் கிடைத்து விடுகிறது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான படம் நாச்சியார். இந்த படத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. இந்த படத்தில் கதையின் நாயகியாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் ஜோதிகா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

வேலைக்கார பெண் கர்ப்பமாகிறார்; ஆனால் அதற்கு காரணம் அவளது காதலன் அல்ல, அவள் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அந்த வீட்டின் முதலாளியால் அவளை பாலியல் துன்பத்துக்கு ஆளாகி கர்ப்பமாகிறாள். அந்த முதலாளியை போலீஸ் அதிகாரி ஜோதிகா மிக கொடூரமாக தண்டிப்பதே நாச்சியார் படத்தின் கதை.

இந்த படத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இவானா ஜோதிகா என 3 பேருடைய நடிப்புமே வேற லெவலில் இருந்தது. தொடர்ந்து இவானா நடித்த படம் லவ்டுடே. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நாயகனாக நடித்த இந்த படத்தில், அவரது காதலியாக இவானா நடித்திருந்தார். மிக சிறப்பான அழுத்தமான நடிப்பை இவானா வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக இருந்தது.

- Advertisement -

அதன்பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் இவானா நடித்திருந்தார். நல்ல அழகும் இளமையான தோற்றமும் நடிப்பு திறமையும் கொண்ட இவானா தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை இவானா கூறியதாவது, நான் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஆடிஷன்களுக்கு செல்கிறேன். அங்கே என் உயரத்தை காரணமாக காட்டி நடிக்க வாய்ப்பு தர மறுக்கின்றனர். நான் 5 அடி உயரம் மட்டுமே இருப்பதால் என்னை வேண்டாம் என்கின்றனர். ஹீரோ உயரமாக இருக்கிறார். நீங்கள் செட் ஆக மாட்டீர்கள் என்று நேரடியாகவே என்னிடம் கூறுகின்றனர் என்று இவானா அந்த நேர்காணலில் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்