- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம்… எனக்காக பிரார்த்தனை செய்யுங்க என உருக்கமாக வேண்டுகோள் விடுத்த...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம்… எனக்காக பிரார்த்தனை செய்யுங்க என உருக்கமாக வேண்டுகோள் விடுத்த கபாலி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் ஹீரோவுடன் சண்டையிடும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பொன்னம்பலம். பல படங்களில் அவர் ஹீரோவிடம் ஆக்ரோஷமாக மோதி அடிவாங்கும் ஒருவராக தான் இருந்தார். அவரை முதன்முறையாக தனது மைக்கேல் மதன காமராஜன் படத்தில் காமெடி ரோலில் சில காட்சிகளில் கமல் நடிக்க வைத்திருந்தார்.

அதன்பிறகு கேப்டன் விஜயகாந்த், நடிகர் பொன்னம்பலத்தை தனது படங்களில் வில்லன் கேரக்டரில் நடிக்க செய்து அவருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். தொடர்ந்து ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சரத்குமார் சத்யராஜ் சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பொன்னம்பலம் அசத்தினார்.

- Advertisement -

குறிப்பாக நாட்டாமை படத்தில் தாய்கிழவி நீளமா பேசாதே மூச்சு வாங்கி செத்துடுவே என மிரட்டலான கேரக்டரில் பொன்னம்பலம் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல் முகவரி படத்தில் பொன்னம்பலம் பேசிய முதல்ல வாங்கோணும் அப்புறம் தோண்டோனும் அப்புறம் தான் கட்டோணும் என்ற டயலாக்கும் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கபாலி என்றாலே பலருக்கும் பொன்னம்பலம் நினைவுதான் வரும். கபாலி படத்தில் ரஜினியே நடித்திருந்தாலும் கபாலி என்றால் பலருக்கும் பொன்னம்பலம் நினைவுதான் வரும். ஏனெனில் பல படங்களில் அவரது கேரக்டர் பெயர் கபாலிதான். சமீபகாலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாத நடிகர் பொன்னம்பலம் இப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த 2020ம் ஆண்டில் சிறுநீரக பிரச்னையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பொன்னம்பலம், அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். இப்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து நடிகர் பொன்னம்பலம் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் நடிகர் பொன்னம்பலம் கூறியிருப்பதாவது, மீண்டும் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நிலை சீராக இன்னும் 2 மாதம் ஆகலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். கமல் சிம்பு தனுஷ் ரவிமோகன் என எல்லோரும் எனக்கு உதவி செய்தார்கள். அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி. எனக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று நடிகர் பொன்னம்பலம் உருக்கமாக அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்