- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் நடிக்கும் ஏகே 65 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் - மீண்டும்...

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் ஏகே 65 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் – மீண்டும் அந்த இயக்குனருக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து அஜீத்குமாரின் அடுத்த படம் ஏகே 64 படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக முதலில் தகவல் வெளியானது. படத்தின் மொத்த பட்ஜெட் 260 கோடி முதல் 275 கோடி ரூபாய் என்றும் இதில் அஜீத்குமார் சம்பளம் ரூ. 180 கோடி, ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம் ரூ. 12 கோடி என்றும் தகவல் வெளியானது.

- Advertisement -

ஆனால் இப்போது ஏகே 64 படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் ஏகே 64 படத்துக்கு பிறகு நடிக்க உள்ள ஏகே 65 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் யார் என்ற தகவலும் வெளியாகி உளளது.

இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 1998ம் ஆண்டில் வெளிவந்த காதல் மன்னன், 1999ம் ஆண்டில் வெளியான அமர்க்களம் 2004ம் ஆண்டில் வெளியான அட்டகாசம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இதில் அமர்க்களம் படத்தில் நடித்த போதுதான் அஜீத்குமார், ஷாலினி இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜீத்குமார் ஷாலினி இணைந்து நடித்த படம் அமர்க்களம். கடந்த 1999ம் ஆண்டில் வெளியான இந்த படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்த இயக்குனர் சரண், தகுதி வாய்ந்த தலைக்கு அமர்க்களமான கிரீடம் ஒன்றை செய்து அனுப்பி இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, நடிகர் அஜீத்குமார் சரண் இருவரும் சமீபத்தில் பேசிய நிலையில், ஏகே 65 படத்தை இயக்குனர் சரண் இயக்கப் போவது உறுதியாகி இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது அட்டகாசம் அமர்க்களம் காதல் மன்னன் படங்களை இயக்கிய இயக்குனர் சரணுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அஜீத்குமார் தந்திருக்கிறார். வீரம் விஸ்வாசம் படங்களுக்கு பிறகு இந்த படத்தில் அஜீத்குமார் வேட்டி சட்டை கெட்டப்பில் ஒரு கிராமத்து கதையில் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்