- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்களை நேரில் சந்திக்க தயாரான நடிகர் விஜய், தவெக கட்சியின் கொள்கை திட்டங்களை தமிழ்நாடு முழுவதும்...

மக்களை நேரில் சந்திக்க தயாரான நடிகர் விஜய், தவெக கட்சியின் கொள்கை திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல திட்டம் – சந்திப்பு பயணம் துவங்க தேதி குறிச்சாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் இப்போது தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜயுடன் இவர் நடித்திருந்த நிலையில் இது அவருக்கு 2வது படமாகும்.

அதேபோல் இந்த படத்தில் நமீதா பைஜூ பாபிஜியோல் பிரகாஷ்ராஜ் கௌதம் மேனன் பிரியாமணி நரேன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய படப்பிடிப்பு கடந்த 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் இந்த படத்தை முடித்துவிட்டு தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக அவர் இந்த படத்துடன் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறி தமிழக அரசியல் களத்தில் படு தீவிரமாக செயல்பட்டு தேர்தலை எதிர்நோக்கி பணியாற்ற திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு பெருவாரியான வெற்றியைப் பெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதே தனது லட்சியம் என்ற குறிக்கோளில் இருந்து வருகிறார். எம்ஜிஆர் விஜயகாந்துக்குபிறகு நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல அபிமானமும் வரவேற்பும் இருக்கிறது. அதனால் நிச்சயமாக இவரது அரசியல் வருகை தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் வருகிற சட்டசபை தேர்தலை பொருத்தவரை திமுகவுக்கும் விஜய்க்கும் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் மோதும் திமுகவை எதிர்கொள்ள தவெக கட்சி என்னென்ன அஸ்திரங்களை எடுக்கப் போகிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும். இந்த சூழ்நிலையில் தனது 69வது படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து தனது கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேரடியாக நடிகர் விஜய் பேச இருக்கிறார்.

இதுகுறித்து தவெக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர் தாடி பாலாஜி கூறுகையில், வருகிற ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற முக்கிய தகவலை தெரிவித்து இருக்கிறார். சுற்றுப்பயணம் குறித்த பட்டியல் தயாரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்