- Advertisement -
Homeபொழுதுபோக்குயோகி பாபுவை வைத்து சூட்டிங் செல்லும் ரவி மோகன்... அதுல இப்படி ஒரு அப்டேட் இருக்குதா......

யோகி பாபுவை வைத்து சூட்டிங் செல்லும் ரவி மோகன்… அதுல இப்படி ஒரு அப்டேட் இருக்குதா… ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான் போங்க…

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய வெற்றி திரைப்படம் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார் ரவி மோகன். அதிலும் கடைசியாக அவர் நடித்த அகிலன், பிரதர், சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை. பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரவி மோகனுக்கு காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜீனி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ரவி மோகன். மிக பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மிஷ்கினிடம் உதவியாளராக இருந்தவர் இதனை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

ஃபேண்டஸி பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெற்றுள்ளனர். ரவி மோகன் தோற்றமே வித்தியாசமாக இருப்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜீனியை தொடர்ந்து கராத்தே பாபு என்னும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரவி மோகன்.

டாடா திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த கணேஷ் கே பாபு இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். வடசென்னையை பிரதானப்படுத்தி அரசியலை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதன் சூட்டிங் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோக, சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திலும் வில்லனாக வருகிறார் ரவி மோகன்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்துவமாக செயல்பட்டு வரும் அவர், code word என்னும் திரைப்படத்தையும் தயாரித்து நடிக்கிறார். சந்தானத்தை வைத்து வடக்குப்பட்டி ராமசாமி என்னும் திரைப்படத்தை இயக்கிய கார்த்தி யோகி இதனை இயக்குகிறார். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கும் ரவி மோகன் திட்டமிட்டுள்ளார்.

யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து இந்தத் திரைப்படத்தை அவர் இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டும், குடும்பப் பொழுது போக்கு திரைப்படம் ஆகவும் இது எடுக்கப்பட இருக்கிறதாம். இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் யோகி பாபு உடனான திரைப்படத்தை ரிலீஸ் செய்ய ரவி மோகன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்