தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 1990களில் வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் அர்ஜூன் பிரபு கார்த்திக் முரளி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதல் மணம் செய்துக்கொண்டார். இப்போது அரசியல் சினிமா தயாரிப்பு என பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை குஷ்பு கூறியதாவது, சினிமாவில் இருப்பவர்கள் 2 வகையான அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள். சினிமாவை விட வெளி உலகத்திலிருந்து தான் நடிகைகளுக்கு அழுத்தங்கள் அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் இருந்துதான் நடிகைகளுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கிறது.
சரியான உடை மேக்கப் லிப்ஸ்டிக் போன்று எல்லாவற்றிலும் சமூக வலைதளங்களால் அழுத்தம் அதிகரிக்கிறது. நாங்கள் சல்வார் ஜீன்ஸ் குர்தா அணிந்து வெளியே வந்தால் உண்மையான ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உருவக்கேலி செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சமூக வலைதளங்களில் வெளியிடும் உருவக் கேலிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
எனக்கு இதுவரை டிசைனர் இல்லை. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இல்லை. திருமணத்திற்கு பொது நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது நானே என்னை தயார் செய்து கொள்கிறேன். என்னுடைய முக பராமரிப்புகளுக்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வேன். மேக்கப் போடுவது எப்போது நிறுத்த வேண்டும் என்பது பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இந்த வயதில் நான் 20 வயது பெண் போல தெரிய வேண்டும் என்றால் அதற்கு மந்திரக்கோல் தான் வேண்டும். வயதாவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் வெளிப்புறத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அகத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலான பெண்கள் இதைத்தான் தவற விடுகிறார்கள்.
ஏனென்றால் அவர்கள் தோற்றம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். உள்ளே இருப்பது முக்கியமில்லை என்று நினைக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு அந்த நேர்காணலில் ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை குஷ்பு இப்போது பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.





