- Advertisement -
Homeபொழுதுபோக்குநாம சம்பளம் வாங்கிட்டு நடிக்க வந்திருக்கோம், இங்கே அதை செய்யலாமா? - நடிகர் ஷ்யாம்- க்கு...

நாம சம்பளம் வாங்கிட்டு நடிக்க வந்திருக்கோம், இங்கே அதை செய்யலாமா? – நடிகர் ஷ்யாம்- க்கு தளபதி விஜய் செய்த அட்வைஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள விஜய், அடுத்து 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயித்து முதல்வர் நாற்காலியில் அமர்வது என்ற லட்சியத்தில் செயல்பட்டு வருகிறார். அதற்காக சினிமாவை விட்டு விலகியும் விட்டார்.

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. ஒரு தரப்பினர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஒரு தரப்பினர் அதிமுக திமுக கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் விஜய் ரசிகர்களையே சந்திக்க விரும்பாதவர். மக்கள் மீது அவருக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது என்றும் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்தவர் ஷ்யாம். விஜய் மீது அதிக அபிமானம் கொண்டவர். தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து பாராட்டி பேசி வருகிறார். நடிகர் விஜய் போன்ற நல்லவர்கள், மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது தமிழக மக்களுக்கு நல்லது என்றும் நடிகர் ஷ்யாம் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஷ்யாம் கூறியதாவது, விஜய் சார், ஷூட்டிங் டைம்ல போன் பார்க்க மாட்டார். இதுபற்றி பேசும்போது, என்கிட்ட அவர், இல்லே எனக்கு ஒண்ணு புரியலே. இங்க நாம நடிக்க வந்திருக்கோம். வேலை பார்க்க வந்திக்கோம். டயலாக் பேப்பர் கொடுத்திருக்காங்க.

- Advertisement -

அதுல நாம கவனம் செலுத்தணுமா? இல்லே போனை வெச்சுக்கிட்டு ஸ்கிரீனில் தள்ளிவிட்டுட்டு அதையே நோண்டிக்கிட்டு இருக்கணுமா? இதில் எது சரியானது.
ஏன்னா நீ ஏதாவது ஒண்ணை பார்த்துட்டு இருப்பே. அது உன்னை டீ ஆக்டிவேட் பண்ணும். இல்லேன்னா ஏதாவது ஒரு போன் கால் வரும். அவங்க யாராவது எதையாவது சொல்வாங்க.

அப்போ உன் கவனம் எல்லாமே வேறு எங்கேயோ போகும். நாம வேலைக்கு வந்திருக்கோம். சம்பளம் தர்றாங்க. அதனால் வேலையில்தான் நாம கவனமாக இருக்கணும். நமக்கு பிரேக் விடறாங்க. அப்போ போன்ல ஏதாவது மெசேஜ் இருந்தா பாரு. முக்கியமா இருந்தா யார் கிட்ட வேணாலும் பேசு என்று நடிகர் விஜய் எனக்கு அட்வைஸ் செய்தார் என்று அந்த நேர்காணலில் நடிகர் ஷ்யாம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்