- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ நடிச்சா படம் ஓடாது… குரங்கு நடிச்சா படம் ஓடும் - மார்கன் பட விழாவில்...

ஹீரோ நடிச்சா படம் ஓடாது… குரங்கு நடிச்சா படம் ஓடும் – மார்கன் பட விழாவில் ஆவேசமாக பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!

- Advertisement -

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்தவர் விஜய் ஆண்டனி. டிஸ்யூம் வேட்டைக்காரன் நான் அவன் இல்லை காதலில் விழுந்தேன் மதகஜ ராஜா என பல படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்தார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவர் நடிகராக மாறினார். நான் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து சலீம் காளி அண்ணாதுரை கோடியில் ஒருவன் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் கொலை ரத்தம் ரோமியோ என பல படங்களில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தார். பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையும் அமைத்தார். ஆனால் விஜய் ஆண்டனி ஹீரோ ஆனபிறகு மற்ற நடிகர்களின் படங்களுக்கு அவர் இசை அமைக்கவில்லை.

- Advertisement -

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ஒரு சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் வியாபாரத்தில் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத படங்களாக அவை இருந்தன. அதனால் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தனர்.

சமீப காலமாக விஜய் ஆண்டனி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இசை கச்சேரிகளை நடத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த அவரது இசை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பியிருக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் லியோ ஜான்பால் இயக்கிய மார்கன் படம் வெளியானது.

- Advertisement -

இந்த படத்தை தயாரித்திருப்பதும் விஜய் ஆண்டனிதான். இதில் அவரது அ்ககா மகன் அஜய் நடித்திருக்கிறார். திரில்லர் கதை களத்தில் உருவான இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். மார்கன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் நடந்த மார்கன் பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, எந்த ஒரு படமும் ஹீரோவால் மட்டுமே ஓடப்போவதில்லை. கடவுளே வந்து ஹீரோவாக நடித்தாலும் இயக்குனரின் எழுத்தும் இயக்கமும் சரியாக இல்லாவிட்டால் அந்த படம் ஓடாது. குரங்கு கழுதையை வைத்து படம் எடுத்தாலும் இயக்குனரின் எழுத்தும் இயக்கமும் சிறப்பாக இருந்தால் அந்தப் படம் வெற்றி பெறும் என்று நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

- Advertisement -

சற்று முன்