- Advertisement -
Homeபொழுதுபோக்குவரி உயர்வால் பாதிப்பு - வரும் ஆகஸ்ட் முதல் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது - விநியோகஸ்தர்கள்...

வரி உயர்வால் பாதிப்பு – வரும் ஆகஸ்ட் முதல் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது – விநியோகஸ்தர்கள் எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம் 70 சதவீதம் வரை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் வெற்றிப் படங்களை தந்த ஹீரோக்கள் மட்டுமின்றி பிளாப் படங்களை தந்த ஹீரோக்களும் இப்படி தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தியிருப்பது தயாரிப்பாளர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்திருக்கிறது.

உதாரணமாக தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தின் மொத்த பட்ஜெட் 275 கோடி ரூபாய் என்றால், அதில் ஹீரோ சம்பளமே ரூ. 180 கோடி என்று முடிவு செய்கின்றனர். இயக்குனர் இசையமைப்பாளர் மற்ற நடிகர்கள் நடிகைகள் சம்பளம் என்று பார்த்தால், படத்தின் தயாரிப்பு செலவுக்காக ரூ. 20 கோடி ஒதுக்குவதே பெரும்பாடாக உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் வேறு ஒரு பிரச்னை தலைதூக்கி ரொம்ப நாட்களாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் திரைப்படங்களுக்கு மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பு முறை தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 12 சதவீதமும் அதற்கு மேல் 18 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் கேளிக்கை வரி 25 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதனால் போதுமான வசூல் இல்லாத சூழலில் தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தமிழகத்தை ஒப்பிட்டு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை குறித்து இதுவரை அவர் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதுச்சேரியில் திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் நடிகர்களின் சம்பளம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதால் அதுவும் ஒருநாள் இதுபோல் பெரிய பிரச்னையாக மாறும் என்று தமிழ் சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர்.

சற்று முன்