தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் யோகிபாபு. பல ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோலில் நடிகர் யோகிபாபு பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இதுதவிர காமெடி படங்களிலும் அவர் அதிகமாக நடித்து வருகிறார். அதனால் எப்போதும் அவர் பிஸியாகவே இருந்து வருகிறார்.
காமெடி நடிகர்கள் எல்லாம் சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுவிட்டாலே ஹீரோக்களாக மாறிவிடுகின்றனர். நடிகர்கள் வடிவேலு விவேக் ஆகியோரை தொடர்ந்து நடிகர்கள் சந்தானம் சூரி சதீஷ்குமார் போன்றவர்களும் ஹீரோக்களாகி விட்டனர். சமீபத்தில் ரோபோ சங்கரும் ஒரு படத்தில் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறிவிடுவதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பலத்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் காமெடியும் இல்லாத படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகின்றன. அதை ஒப்பேற்ற யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி மொட்டை ராஜேந்திரன் போன்ற சிலர் உதவுகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் யோகிபாபு கடந்த சில வாரங்களாக நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்திலும் யோகிபாபு நவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் 2 படத்தில் யோகிபாபுவை ரஜினி கலாய்க்கும் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான வாரிசு படத்தில் நடிகர் யோகிபாபு நடிகர் விஜயுடன் இணைந்து காமெடி ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அந்த படப்பிடிப்பில் ஒரு காட்சியில் நடித்துக்கொண்டு இருந்த போது திடீரென நடிகர் விஜய், அருகில் நின்றிருந்த யோகிபாபுவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் அந்த புகைப்படத்தை பார்த்து நடிகர் யோகிபாபு கூறியதாவது, இது வந்து அவரே பண்ணதுதான். இது சீனோ டைரக்டர் சொல்லியோ பண்ணியது இல்லை. அது ஒரு ரொமான்ஸ் சீன். அந்த ரொமான்ஸ் சீன்ல நியாயமா அது ராஷ்மிகாவுக்கு கொடுக்க வேண்டியது. அவங்க ரொம்ப தள்ளி நின்னதால, என்னை பிடிச்சு டக்குன்னு கொடுத்துட்டார் என்று நடிகர் யோகிபாபு கூறியிருக்கிறார்.





