- Advertisement -
Homeபொழுதுபோக்குயாருமே கேட்காத ஒரு கேள்வியை நடிகர் விஜய் என்னை பார்த்து கேட்டார், நான் ஆடிப்போயிட்டேன் -...

யாருமே கேட்காத ஒரு கேள்வியை நடிகர் விஜய் என்னை பார்த்து கேட்டார், நான் ஆடிப்போயிட்டேன் – ஓபனாக பேசிய நடிகர் ராதாரவி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தியவர் ராதாரவி. நடிகவேள் எம்ஆர் ராதாவின் மகன். இவரது சகோதரிகள்தான் நடிகைகள் ராதிகா நிரோஷா. சகோதரிகளின் கணவர்கள் நடிகர்கள் சரத்குமார் ராம்கி என்பது குறிப்பிடத்தக்கது. ராதாரவியின் அண்ணன் நடிகர் எம்ஆர்ஆர் வாசு மகன்தான் நடிகர் வாசு விக்ரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராதாரவி சிறந்த குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் ராஜாதிராஜா சின்னதம்பி உத்தமராசா சின்னமாப்ளே சின்னதாயி காதலுக்கு மரியாதை தொடரி சர்கார் என பல படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அரசியலிலும் ராதாரவி இருந்தவர்.

- Advertisement -

நடிகர் ராதாரவி எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் தன் தனித்துவமான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலைஞர். சின்னமாப்ளே படத்தில் ஆளவந்தான் என்ற பண்ணையார் கேரக்டரில் அவரது காமெடி நடிப்பு வேற லெவலில் இருக்கும். நடிகர் விஜயுடன் சர்கார் படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் ராதாரவி நடித்திருந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி கூறியதாவது, நான் நடிகர் விஜயுடன் இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் கடைசி படம் சர்கார் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் ஷூட்டிங் மெமோரியல் ஹாலில் நடந்தது, அப்போது நடிகர் விஜய் என்னை தனியாக அழைத்தார். என்னிடம் அவர் பேச விரும்பினார்.

- Advertisement -

என்ன விஜய், சொல்லுங்க என்றார். அப்போது விஜய், ஒரே ஒரு சின்ன கேள்விங்க. சூட்டிங் கேஸ் நடந்தது 1967 ஜனவரி 12 என்றார். ஆமா அதுக்கு என்ன இப்போ என்றேன். அந்த சூட்டிங் கேஸ் நடந்தப்போ ஈவ்னிங் உங்களுக்கு தெரிய வந்திருக்கும் அல்லவா, வீட்டில் இப்படி நடந்துருச்சுன்னு. அப்போ உங்க வீட்டுல நிலமை, அந்த சூழ்நிலை எப்படி இருந்தது என்று கேட்டார்.

என்ன அறிவுய்யா இது? இதுவரைக்கும் யாருமே இந்த கேள்வியை என்கிட்ட கேட்டதில்லே. ஏன் சுட்டாருன்னு கேட்பாங்க. தப்பு பண்ணிட்டாருன்னு பேசுவாங்க. ஆனால இந்த பீலிங்ஸ் என்னான்னு கேட்ட ஒரே ஆளு விஜய்தான். அதனால்தான் அவர் கட்சி கிட்சின்னு ஆரம்பிச்சப்போ கூட நான் பெருசா எதுவும் பேசலை என்று நடிகர் ராதாரவி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்