- Advertisement -
Homeபொழுதுபோக்குமாவீரன் இயக்குனருடன் விக்ரம் கைகோர்த்த திரைப்படம் என்னதான் ஆச்சு... பொங்கிய சீயான் ரசிகர்கள்... தயாரிப்பாளர் தரப்பிலிருந்து...

மாவீரன் இயக்குனருடன் விக்ரம் கைகோர்த்த திரைப்படம் என்னதான் ஆச்சு… பொங்கிய சீயான் ரசிகர்கள்… தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வந்த பதில் என்ன தெரியுமா….

- Advertisement -

சீயான் விக்ரமுக்கு கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பா ரஞ்சித் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அதனை அந்த திரைப்படம் பூர்த்தி செய்ய தவறிவிட்டது என்று தான் கூற வேண்டும். மிகவும் தொய்வான திரைக்கதை அமைந்திருந்ததால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக படத்தில் பேசும் வசனங்கள் புரியவே இல்லை என்றும், இரண்டாம் பாதி எங்கெல்லாமோ பயணிக்கிறது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சித்தா திரைப்படத்தை எடுத்த அருண்குமார் உடன் கைகோர்த்தார் விக்ரம். இவர்களது கூட்டணியில் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

- Advertisement -

ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஒரு சிலர் படம் நன்றாக இல்லை என்று கூறினாலும் அது படத்தின் வசூலை எள்ளளவும் பாதிக்கவில்லை. ஒரே இரவில் நடக்கும் கதையை மிகவும் விறுவிறுப்பாக கூறி இருந்தார் இயக்குனர் அருண்குமார்.

அதற்கு ஏற்றது போலவே காளி என்னும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போயிருந்தார் விக்ரம். படத்தின் சண்டைக் காட்சிகளில் அவர் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்திருந்தார். இப்படி வீர தீர சூரன் திரைப்படம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரமுக்கு ஒரு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து மண்டேலா மற்றும் மாவீரன் ஆகிய திரைப்படங்களை எடுத்த மடோன் அஸ்வினுடன் விக்ரம் கைகோர்ப்பதாக அறிவிக்கப்பட்டது. இது அவரது 63வது திரைப்படமாக எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதன் சூட்டிங் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவே இல்லை. அதேசமயம் 96 திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரேம்குமார் விக்ரமிற்கு ஒரு கதை கூறியிருப்பதாகவும், விரைவில் இதற்கான சூட்டிங் தொடங்கும் என்றும் பேச்சு அடிபட்டது.

எனினும் அவரது 63 வது திரைப்படம் என்ன ஆயிற்று என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த சூழலில் அதன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தற்போது அதற்கு பதில் தெரிவித்துள்ளார். அதில், இந்த ப்ராஜெக்ட் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. தற்போது இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. சரியான நேரத்தில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்