- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 நாட்களில் பறந்து போ, 3 பிஹெச்கே படங்களின் வசூல் நிலவரம் - பாசிட்டிவ் விமர்சனங்கள்...

4 நாட்களில் பறந்து போ, 3 பிஹெச்கே படங்களின் வசூல் நிலவரம் – பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தும் ரசிகர்களின் போதிய ஆதரவு இல்லையா?

- Advertisement -

கமர்ஷியல் என்ற பெயரில் பெரிய இயக்குனர்கள் நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் குப்பை படங்களை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இனி ஸ்டார் வேல்யூ மட்டுமே படத்தை காப்பாற்றாது. நல்ல கதையம்சம் உள்ள கதைக்களத்தில் உருவான படங்கள் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எடுபடும்.

அதற்கு சிறந்த உதாரணமாக பார்க்கிங் குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் லப்பர் பந்து சித்தா மாமன் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஜெயித்துக் காட்டியிருக்கின்றன. அதே நேரத்தில் இந்தியன் 2 தக்லைஃப் குபேரா விடாமுயற்சி கங்குவா போன்ற கமர்ஷியல் படங்கள் படுதோல்வியை சந்தித்திருக்கின்றன.

- Advertisement -

ரசிகர்கள் பொழுதை போக்கிக்கொள்ள தான் தியேட்டர்களுக்கு வருகின்றனர். அதில் இரண்டரை மணி நேரம் அவர்கள் சந்தோஷமாக சிரிக்கவும் பொழுதை கழிக்கவும் விரும்புகின்றனர். அதுவும் நண்பர்கள் குடும்பத்துடன் வரும் அவர்களுக்கு துப்பாக்கி கத்தி ரத்தம் பழிவாங்கல் ஹீரோயிசம் என காட்டியே ஏமாற்றுவதை இனியும் அவர்கள் ஏற்க தயாராகவில்லை.

யதார்த்த வாழ்க்கையில் சம்பவங்களை படம்பிடித்து உணர்வுபூர்வகமாக காட்டியதால்தான் இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை படங்கள் ஜெயித்தது. முதல் மரியாதை படம் இன்றும் கொண்டாடப்படுகிறது. மகேந்திரன் பாலுமகேந்திரா சேரன் போன்றோர் இயக்கிய படங்களும் அதனால் வெற்றி பெற்றன.

- Advertisement -

அதனால் இப்போது தமிழ் சினிமா யதார்த்த கதைக்களத்துக்கு மாறியிருக்கிறது. அந்த வகையில் சரத்குமார் தேவயானி சித்தார்த் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான 3 பிஹெச்கே படத்துக்கும் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

ஆனால் 3 பிஹெச்கே படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 6.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலை கடந்துள்ளது. அதே போல் பறந்து போ படத்தின் 4 நாட்கள் வசூல் நிலவரம் ரூ. 4.1 கோடியாக இருக்கிறது. பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தும் இந்த படத்துக்கு வசூல் பெரிய அளவில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இந்த படங்களின் திரைகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவினரும் ஊர் ஊராக தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து பிரமோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்