தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், நடிப்பில் இருந்து முற்றிலுமாக விலகி இனி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ். ஸ்டூடண்ட் நம்பர் 1 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களில் சிபிராஜ் நாயகனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டென் ஹவர்ஸ் என்ற திரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எனினும் அப்பா சத்யராஜ் அளவுக்கு சிபிராஜ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை.
நடிகர் சத்யராஜ், நடிகர் விஜய் இருவரும் இணைந்து நடித்த படம் நண்பன். இந்த படத்தில் பிரின்ஸிபால் கேரக்டரில் சத்யராஜூம் கல்லூரி மாணவராக நடிகர் விஜய் மற்றும் ஜீவா ஸ்ரீகாந்த் சத்யன் உள்ளிட்டோர் நடித்திருப்பவர். இந்த படத்தின் சத்யராஜின் மகள் இலியானாவை விஜய் காதலிப்பார். ஷங்கர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யாவும் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சத்யராஜ் மகன் நடிகர் சிபிராஜ் கூறியதாவது, எனக்கு திருமணமான பிறகு முதன்முதலில் என் மனைவியுடன் கல்யாண சாப்பாடு சாப்பிட்டது விஜய் சார் வீட்டில்தான். எங்கள் திருமணத்தின் போது அவர் ஊரில் இல்லை. வில்லு பட ஷூட்டிங்கில்தான் சுவிட்சர்லாந்தில் இருந்தார். அவங்க பேமிலியில் இருந்து எல்லோரும் வந்திருந்தாங்க. ஆனா அவர் மட்டும் வர முடியலே.
அதனால் அவர் எங்களை குடும்பத்தோடு வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்தார். நல்ல சூப்பர் உணவு வகைகளோடு எங்களுக்கு விருந்து கொடுத்தார். அது ரொம்ப சந்தோஷமான ஒரு தருணம். என்னோடது லவ் மேரேஜ்தான். அப்போது கேஷூவலாக என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது, சரிப்பா உன்னோட லவ் ஸ்டோரியை சொல்லு என்றார்.
அப்புறம் நான் இந்த மாதிரிங்க இந்த மாதிரிங்க இப்படி எல்லாம் ஆச்சுங்க என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன். அவரும் ரொம்பவும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தார். பேசிக்கொண்டு இருந்ததால் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகி விட்டது. அதனால் வேலைக்காரங்க எல்லாத்தையும் தூங்க போகச் சொல்லிட்டு எங்களுக்கு விஜய் அண்ணாவே வந்து பரிமாறினார். அது மறக்க முடியாத ஒரு சந்தோஷமான தருணம் என்று நடிகர் சிபிராஜ் கூறியிருக்கிறார்.





