- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நயன்தாரா அப்படி ஒரு பதிவை செய்தாரா? விக்கியுடன் அவருக்கு என்ன தான் பிரச்னை? இணையத்தில்...

நடிகை நயன்தாரா அப்படி ஒரு பதிவை செய்தாரா? விக்கியுடன் அவருக்கு என்ன தான் பிரச்னை? இணையத்தில் இருவரும் பிரிந்ததாக பரவிய தகவலால் பரபரப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள வயதான மூத்த நடிகர்கள் நடிகைகள் அல்லது பிரபலமான மனிதர்கள் திடீர் என இறந்துவிட்டதாக இணையத்தில் சிலர் வதந்தியை பரப்பி விட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். அதே போல் திருமண வயது கடந்து பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வரும் நடிகர் நடிகைகளை திடீரென ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக மார்பிங் புகைப்படங்களை இணையத்தில் விட்டு வைரலாக்குகின்றனர்.

அத்துடன் நட்சத்திர தம்பதிகளை பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது புரளியை கிளப்பி விடுகின்றனர். இது அடிக்கடி நடந்துக்கொண்டே இருக்கிறது. இப்படி அடிக்கடி பொய்யான வதந்திகளை பரப்பி விடுவதால் சில நேரங்களில் உண்மையாக சில தகவல் வெளியாகும்போது அதுவும் வதந்தியாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு வதந்திகள் பெருகி விட்டன.

- Advertisement -

இப்போது நடிகை நயன்தாராவும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் சில தினங்களுக்கு முன்புதான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுடன் பழனி மலை முருகன் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அந்த புகைப்படங்கள், வீடிேயோக்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவுதான் அவர்களது பிரிவை உறுதிப்படுத்தியதாக சிலர் தகவலை பரப்பி வருகின்றனர். குறைவான அறிவுடைய ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் உங்கள் திருமணம் மிகப்பெரிய தவறாக மாறும். உங்கள் கணவரின் செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல.

- Advertisement -

என்னை விட்டுவிடுங்கள். உங்களால் ஏராளமான பிரச்னைகளை நான் அனுபவித்து விட்டேன் என்று நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். பிறகு உடனே அதை டெலீட் செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அதுதான் இந்த தகவலுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு பதிவை நயன்தாரா செய்யாமல் சிலர் பொய்யான வதந்தியை பரப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது நயன்தாரா நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா 157 தெலுங்கு படத்திலும், சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் பிஸியாக இருந்து வருகிறார். விக்னேஷ் சிவன் அடுத்து அவரது இயக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ள எல்ஐகே படத்தில் பிரமோ பணிகளில் பிஸியாக உள்ளார். அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கின்றனர். வேண்டும் என்றே சிலர் இதுபோன்ற வதந்திகளை கிளப்பி விடுகின்றனர் என்று நயன்தாரா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்