- Advertisement -
Homeபொழுதுபோக்குஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படம்… லேட்டஸ்ட் அப்டேட் பார்த்து மிரண்டு போன...

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படம்… லேட்டஸ்ட் அப்டேட் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் – ஏலே இது பெரிய சம்பவமா இல்லே இருக்கு…?

- Advertisement -

இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் என சூப்பர் ஹிட் படங்களை தந்தார். அடுத்து இயக்குனர் அட்லி இந்தியில் இயக்கிய படம் ஜவான். ஷாருக்கான் நயன்தாரா நடித்த இந்த படம் 1150 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இதையடுத்து அட்லி இயக்கும் 6வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது. புஷ்பா புஷ்பா 2 படங்களில் அபாரமான பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு இந்த படத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கதாநாயனாக நடிக்கிறார். சாய் அபயங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி என்றும் அட்லி சம்பளம் ரூ. 100 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சயன்டிபிக்சன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை வேற லெவல் படமாக உருவாக்கும் திட்டத்தில் இயக்குனர் அட்லி ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜூன் 2 அல்லது 3 கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த படத்தில் மொத்தம் 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தீபிகா படுகோனே ராஷ்மிகா மந்தனா ஜான்வி கபூர் மிர்ணாள் தாகூர் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் என 5 நாயகிகள் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் வில்ஸ் மித் நடிப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான சம்மதம் கிடைக்கவில்லை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததும் இல்லை; இனிமேலும் இப்படி ஒரு படம் வரப்போவதும் இல்லை என்று ரசிகர்கள் மிரண்டு போய் சொல்லும் அளவுக்கு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நட்சத்திர நடிகர் நடிகைகளை கொண்டு வருவதில் இயக்குனர் அட்லி அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

அதனால்தான் ஒரு படத்தில் 5 கதாநாயகிகள், ஹாலிவுட் வில்லன் நடிகர் சயன்பிக்சன் கதைக்களம் என வேற லெவலில் படத்தை உருவாக்க அட்லி திட்டமிட்டு வருகிறார். குறிப்பாக 2000 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை இந்த படம் அடைந்தே தீர வேண்டும் என்பதால் தனது 6வது படத்தை உலகம் முழுவதும் பாராட்டும் கவனிக்கும் ஒரு ஐகான் படமாக உருவாக்க அட்லி தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்