தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்யும் நடிக்கும் கலைஞர்களில் நடிகர் கலையரசனும் ஒருவராக இருக்கிறார். அட்டக்கத்தி மெட்ராஸ் சார்பட்டா பரம்பரை வாழை தானா சேர்ந்த கூட்டம் டார்லிங் உரு கபாலி அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் கலையரசன் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் உருவான டைட்டானிக் காதலும் கவுந்து போகும் படம் 7 ஆண்டுகளாகியும் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது.
சமீபத்தில் இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கலையரசன், டைட்டானிக் காதலும் கவுந்து போகும் சிறந்த படம் விரைவில் ரிலீஸ் செய்து விடுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த படத்தின் கதாநாயகி ஆஷ்னா சவேரியும் காத்திருக்க முடியவில்லை என்று அந்த பதிவை செய்திருந்தார்.
இப்போது நடிகர் கலையரசன் சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது ரூ. 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நீங்கள் மேனேஜர் மூலமாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறதே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கலையரசன், எனக்கு மேனேஜரே கிடையாது சார் என்று கூறினார்.
மேலும் நடிகர் கலையரசன் கூறியதாவது, உங்களிடம் யாரோ தவறான தகவலை கூறியிருக்கின்றனர். எனக்கு படத்தில் நடிக்க கண்டென்ட்தான் முக்கியம். அவ்வளவு சம்பளம் எல்லாம் வாங்குவதில்லை. யாரும் கொடுத்ததும் இல்லை. அதுதான் உண்மை. ரொம்ப நல்ல படமாக இருந்தால் நமக்கு தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்குவதுதான்.
நமக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ, நம்ம லைப் ஸ்டைலுக்கு ஒரு குறிப்பட்ட தொகை சம்பளமாக பெற்றுதான் ஆக வேண்டும். அதனால் ஒரு காலத்தில் 20 ஆயிரம் ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும், ராஜ வாழ்க்கை வாழலாம் என்று யோசிச்சவன்தான் நான். ஆனா இப்ப குழந்தைகள் பெரிய ஸ்கூலில் படிக்கிறாங்க. ஸ்கூல் பீஸ் கட்டணும் அந்த மாதிரி நிறைய தேவைகள் இருக்கு.
சில படங்கள் எனக்கு பிடிச்சு நடிக்கும்போது அவங்க கொடுக்கற சம்பளத்தை வாங்குகிறேன். சில படங்களில் சம்பளமே கொடுக்காமலும் விட்டுருவாங்க. அதை எல்லாம் கண்டுக்கறதே இல்லை. அந்த மாதிரி நிறைய படங்கள் விட்டுருக்கேன். அந்த மாதிரி வரவேண்டிய பணம் வந்தாலே நான் 2 படம் புரடியூஸ் பண்ணலாம் சார் என்று நடிகர் கலையரசன் தனது சம்பளம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





