- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலியை பார்த்ததும் ரஜினி சார் என்னை கட்டிப்பிடித்து அந்தப் படம் மாதிரி இருக்குன்னு சொன்னாரு... முதல்...

கூலியை பார்த்ததும் ரஜினி சார் என்னை கட்டிப்பிடித்து அந்தப் படம் மாதிரி இருக்குன்னு சொன்னாரு… முதல் முறையாக கூலி அனுபவங்களை பகிரும் லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஆறாவது திரைப்படமாக கூலி அமைந்துள்ளது. ஏற்கனவே கமல், விஜய், கார்த்தியை வைத்து இயக்கிய அவர் இந்த முறை ரஜினியுடன் இணைந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல நாகர்ஜூனா அமீர் கான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே இருப்பதால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படியான சூழலில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூலி பட அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரஜினி சார் திரைப்படங்களிலேயே எனக்கு தளபதி மிகவும் பிடிக்கும். அதேபோல கூலியும் இருக்க வேண்டும் என்று நான் முயற்சி செய்தேன். படத்தை டப்பிங் ஸ்டுடியோவில் பார்த்த பிறகு, ரஜினி சார் என்னை வந்து கட்டிப்பிடித்தார்.

- Advertisement -

எனக்கு இது தளபதி போன்று இருக்கிறது என்று கூறினார். அதுதான் என்னுடைய நாள். அன்று இரவு நான் நன்றாக தூங்கினேன். முதலில் ரஜினி சாருக்கு நான் ஒரு பேண்டஸி கதையை தான் கூறினேன். அவரும் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. இதனால்தான் நான் கூலி படத்தின் கதையை எழுதினேன்.

கூலி படப்பிடிப்பு தளத்தில் நாள்தோறும் 700 முதல் 1000 பேர் இருப்பார்கள். துறைமுகத்தையும் தொழிலாளர்கள் பற்றிய கதையைத்தான் கூலி கூறுகிறது. இப்போது படப்பிடிப்பு முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது. நாங்கள் அவரை மிஸ் பண்ணுகிறோம். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயிலர் 2 சூட்டிங் தளத்திற்கு சென்று ரஜினி சாரை பார்த்து வருகிறேன்.

- Advertisement -

எனது படத்திற்கு பாடல்கள் என்று வரும்போது அது முழுக்க முழுக்க அனிருத் விருப்பமாகத்தான் அமையும். நான் அவரை முழுவதுமாக நம்புகிறேன். படத்தில் அமீர்கான் சிறிய நேரமே வந்தாலும் அதனுடைய தாக்கம் பெரிய அளவில் இருக்கும். நாகர்ஜூனா சாரும் இப்படி ஒரு ரோலை கடந்த 40 வருடங்களில் செய்தது இல்லை. அவர் என்னை ஒரு ஏழு அல்லது எட்டு தடவை கெட்டவன் மாதிரி கதை சொல்ல வச்சார்.

சவுபின் கதாபாத்திரம் கூலி திரைப்படத்தில் முதலில் இல்லவே இல்லை. அதன் பிறகு ஒரு ஆறு மாதமாக அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை விவரித்து எழுதினேன். முதலில் பகத் பாசிலிடம் தான் நான் சென்றேன். ஆனால் அவர் டேட் இல்லை என்று கூறிவிட்டார். இதன் பிறகு சௌபின் சாகிர் படத்திற்குள் வந்தார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்