- Advertisement -
Homeபொழுதுபோக்குமனைவியை பிரிந்து வாழ்கிறாரா நடிகர் விஜய்? மதுரை மாநாட்டில் இதற்கு பதில் கிடைக்க வாய்ப்பு -...

மனைவியை பிரிந்து வாழ்கிறாரா நடிகர் விஜய்? மதுரை மாநாட்டில் இதற்கு பதில் கிடைக்க வாய்ப்பு – ஆகஸ்ட் 25 கேப்டன் பிறந்தநாள் மட்டுமல்ல… விஜய்க்கு மற்றொரு ஸ்பெஷலும் இருக்குது!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் அறிவித்தார். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து தனது கட்சிக் கொடியை பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கட்சியின் கொள்கை பாடலும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளிக்கு சில தினங்கள் முன்னதாக அக்டோபர் மாதம் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடந்தது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். 48 நிமிடங்கள் கட்சியின் தலைவர் விஜய் ஆவேச உரை நிகழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

இப்போது நடிகர் விஜய், தனது கட்சியின் 2வது மாநில மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தில் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன் என்று அதில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் அறிவிப்பின்படி வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி இந்த மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளனர். அந்த நாள் புரட்சிக்கலைஞர் கேப்டன் என அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளாகும். மதுரையில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜயகாந்த் அரசியலிலும் பல சாதனைகளை செய்து காட்டியவர். அவரது பிறந்த நாளில் மதுரையில் விஜய் தனது கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதுமட்டுமின்றி வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி நடிகர் விஜய், சங்கீதாவின் திருமண நாளாகும். கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்படி நடிகர் விஜய் தனது 26வது ஆண்டு திருமண நாளில் தனது தவெக கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துகிறார். திருமண நாளில் கட்சி மாநில மாநாட்டை விஜய் நடத்துவதும் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவர் தனது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் நெருங்கிய நட்பு, விஜயின் அரசியல் ஆர்வம், புஸ்லி ஆனந்துடன் நட்பு போன்ற காரணங்களால் விஜயை அவரது மனைவி சங்கீதா பிரிந்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஜேப்பியார் இல்ல திருமண விழாவுக்கு அவர்கள் தனித்தனியாக வந்ததும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் திருமண நாளில் மதுரையில் நடக்கும் கட்சி மாநாட்டில் விஜயின் மனைவி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்