- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கவினுக்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி - இந்த முறை 2வது இன்னிங்ஸ்சில்...

நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நாயகி – இந்த முறை 2வது இன்னிங்ஸ்சில் வெற்றியை குவிப்பாரா?

- Advertisement -

ஆரம்பத்தில் விஜய் டிவியில் சீரியல் நடிகராக இருந்து பிறகு சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் கவின். அவரது நடிப்பில் வெளியான டாடா லிப்ட் படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் நடித்த ஸ்டார் பிளடி பெக்கர் போன்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை. அதுவும் பிளடி பெக்கர் படம் படுதோல்வியை சந்தித்தது.

நடிகர் கவின் வளர்ந்துவரும் நடிகராக இருந்தாலும் தொடர்ந்து அவர் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன. பல கோடிகளில் சம்பளம் கேட்பது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அலப்பரை செய்வது, சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபித்துக்கொண்டு ஷூட்டிங் வர மறுப்பது, ஷூட்டிங்குக்கு தாமதமாக வருவது என பல சர்ச்சைகள் அவர் மீது இருந்து வருகின்றன.

- Advertisement -

அடுத்தாக நடிகர் கவின் நடித்த கிஸ் என்ற படமும் மாஸ்க் என்ற படமும் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்சன் பணிகளும் நிறைவடைந்த நிலையில் விரைவில் ரிலீஸாக உள்ளன. சர்ச்சகைள் விமர்சனங்கள இருந்த போதிலும் நடிகர் கவினுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன.

தண்டட்டி படத்தை இயக்கிய இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் கவின் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதை தொடர்ந்து நடிகர் கவினின் 9வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் கென் ராய்சன் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.

- Advertisement -

தின்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு ஓப்ரோ இசையமைக்கிறார். பேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தொடர்ந்து கேப்டன் மில்லர் எதற்கும் துணிந்தவன் டான் சரிபோதா சனிவாரம் போன்ற படங்களில் நடித்தார்.

சிவகார்த்திகேயன் தனுஷ் சூர்யா தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் கோல்டன் ஸ்பேரோ ஐட்டம் பாட்டுக்கு பிரியங்கா மோகன் குத்தாட்டம் போட்டும் வாய்ப்புகள் குவியவில்லை. அதனால் கவின் படத்தில் ரீ என்ட்ரி தரும் நடிகை பிரியங்கா மோகன், 2வது சுற்றில் அதிக படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்