- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பன் வரான் வழி மறிக்காதே... சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெறிக்கவிடும் கருப்பு படக்குழு... அட்டகாசமான போஸ்டரை...

கருப்பன் வரான் வழி மறிக்காதே… சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெறிக்கவிடும் கருப்பு படக்குழு… அட்டகாசமான போஸ்டரை பார்த்து சிலிர்த்துப் போன ரசிகர்கள்…

- Advertisement -

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 46வது திரைப்படமாக உருவாகிறது. இதற்கு முன்னதாக லக்கி பாஸ்கர் என்னும் அட்டகாசமான திரைப்படத்தை இயக்குனர் கொடுத்ததால், இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் இதற்கான பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இதுபோக ராதிகா, ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், நிச்சயமாக குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என்றும் அண்மையில் கூறியிருந்தார் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி.

- Advertisement -

இதனிடையே சூர்யா நடித்த கருப்பு திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஆர் ஜே பாலாஜி இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. ஏற்கனவே மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை எடுத்த பாலாஜி, அடுத்ததாக அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த பாகத்தை, இயக்குனர் சுந்தர் சியிடம் ஒப்படைத்தது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவுடன் ஆர் ஜே பாலாஜி இணைய இருப்பதாகவும், இதற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்படியான சூழலில்தான் அந்த ரூட் மாறி, சூர்யாவுடன் கைகோர்த்தார் ஆர் ஜே பாலாஜி.

- Advertisement -

இந்த திரைப்படம் ஆன்மீகம் கலந்த பேண்டஸி காவியமாக எடுக்கப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் திரிஷா. லப்பர் பந்து சுவாசிகா, நட்டி, யோகி பாபு, மலையாள நடிகர் இந்திரன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வருகிறார்.

அது மட்டுமல்ல அவர் கருப்புசாமி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சொல்கிறார்கள். இப்படியான சூழலில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கருப்பு திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு நிமிடம் 36 வினாடிகள் இதன் டீசர் இருக்கும் என சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்