இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில் மீண்டும் இணைந்துள்ள படம் மாரீசன். இந்த படத்தை சுதீஷ் சங்கர் என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் கோவை சரளா லிவிங்ஸ்டன் பிஎல் தேனப்பன் சித்தாரா என முக்கிய கேரக்டர்களின் நடித்திருக்கின்றனர்.
மாரீசன் படத்தை சூப்பர் குட் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தயாரித்திருக்கிறார். இது இந்த நிறுவனத்தின் 98வது படமாக உருவாகி உள்ளது. டிராவலிங் திரில்லர் படமாக வருகிற 25ம் தேதி அதாவது நாளை மறுதினம் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் கதைப்படி ஒரு திருடன் அவர் திருடிய ஒரு பைக்கில் நம்பர் பிளேட்டை மாற்றச் செல்லும்போது ஒரு ஏடிஎம் சென்டரில் வடிவேலுவை பார்க்கிறார். அப்போது வடிவேலுக்கு ஏடிஎம் பின் நம்பர் மறந்து போகிறது. அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்று பகத் பாசிலுக்கு உடனே தெரிந்து விடுகிறது.
அவரிடம் எங்கே போகணும் என்று கேட்கும் பகத் பாசிலிடம், அவர் திருவண்ணாமலைக்கு போகணும் என்று சொல்கிறார். அவரை பைக்கில் பகத் பாசில் அழைத்துச் செல்கிறார். இந்த பயணத்தின் போது வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை அபேஸ் செய்ய பகத் பாசில் திட்டமிடுகிறார். கடைசியில் வடிவேலுவின் பணத்தை அவர் திருடினாரா இல்லையா என்று திரில்லர் கலந்து மாரீசன் படத்தின் கதையாக சொல்லி இருக்கின்றனர்.
மாரீசன் படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில், 25ம் தேதி விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் குறித்து படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டிராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து பிரம்மோசன் செய்து வருகிறார்கள். ஆனால் மாரீசன் படம் குறித்து நடிகர்கள் வடிவேலுவும் பகத் பாசிலும் எந்த பிரமோசனும் செய்யாமல் அமைதியாக இருந்து வருகிறார்கள். அதனால் வருகிற 25ம் தேதி மாரீசன் படம் ரிலீஸாவதே பலருக்கும் தெரியாத நிலை இருக்கிறது.
மலையாள நடிகர் பகத் பாசில் தமிழில் பல படங்களில் நடித்தும் அவர் படத்தின் பிரமோசனுக்கு தலை காட்டுவதிலல்லை. சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் படத்துக்கு விழுந்து விழுந்து பிரமோசன் செய்த நடிகர் வடிவேலு, மாரீசன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தலை காட்டாமல் இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரீசன் படத்தில் பிரதான கேரக்டர்களில் நடித்த வடிவேலு பகத் பாசில் இருவருமே மாரீசன் படத்தின் பிரமோஷனுக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார்கள். அதனால் படக்குழுவும் டீசர் வெளியீடு பாடல் வெளியீட்டு விழா ப்ரீ ரிலீஸ் என எதுவும் நடத்தாமல் விட்டுவிட்டனர். ஒட்டுமொத்தமாக படக் குழுவை இந்த படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





