லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், அமீர்கான் நாகர்ஜூனா உபேந்திரா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் சோபின் சாஹிர் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியாகிய சிக்குடு, மோனிஷா, பவர் ஹவுஸ் ஆகிய மூன்று பாடல்களும் ஹிட் அடித்தன. வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில், அதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதற்கு நடுவே, பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் அவர் கூறியிருப்பதாவது,
என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல திரைப்படத்தை இயக்க வேண்டும். ஆயிரம் கோடி என்பது என்னை பொருத்தவரைக்கும் சாதனை அல்ல. பொன்னியின் செல்வன் திரைப்படமும் நல்ல வசூலை பெற்றது. நமக்கு பெருமையையும் தேடி கொடுத்தது. ஒரு கிரிக்கெட் வீரர் 99 ரன் எடுத்தாலும், அது பெரிய ஸ்கோர் ஆகவே கருதப்படும் அந்த அணியும் வெற்றி பெறும்.
கூலி திரைப்படத்திற்காக நான் ஆக்சன் காட்சிகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை. இதுவும் ஒரு ஆக்ரோஷம் நிறைந்த ஆக்சன் ஃபிலிம் ஆகத்தான் இருக்கும். படத்தில் நாகர்ஜுனா சாருக்கும் ஒரு முக்கிய ரோல் இருக்கிறது. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். அவரைப் பார்த்துதான் நான் பங் ஸ்டைலில் முடி வளர்க்கத் தொடங்கினேன்.
ரஜினிகாந்த் சார் தனது சுய சரிதையை எழுதி வருகிறார். கூலி திரைப்படத்தின் கடைசி இரண்டு கட்ட படப்பிடிப்புகளின்போது அவருக்கு நேரம் கிடைக்கும் சமயங்களில் இதை செய்கிறார். அந்தந்த வயதில் என்ன நடந்தது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் என்னைத் தவிர வேறு யாரிடமும் இதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை அது எனக்கு நெருக்கமாக இருக்கிறது.
எல் சி யு வின் சில புது கதாபாத்திரங்களை கொண்டு வரலாம் என்று இருக்கிறேன். குறிப்பாக பெண் கதாபாத்திரங்கள் குறித்து நான் எழுதி வருகிறேன். ஒரு இரண்டு அல்லது மூன்று புதிய கதாபாத்திரங்கள் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். கூலி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.





