- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் கைவிடப்பட்டதா? உண்மையில் நடந்தது என்ன? - சுடச்சுட வெளியான...

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் கைவிடப்பட்டதா? உண்மையில் நடந்தது என்ன? – சுடச்சுட வெளியான லேட்டஸ் அப்டேட்!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக்லைஃப். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆனார். இதற்கான பிரமோ ஷூட் சென்னையில் 4 நாட்களாக சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த படம் வடசென்னை 2ம் பாகம் என தகவல் பரவிய நிலையில், வடசென்னை 2ம் பாகம் படத்தில் நடிக்கப் போவது நடிகர் தனுஷ்தான், இந்த படம் வடசென்னை படத்தின் ஒரு கிளை கதையில் இருந்து உருவாகிறது. 2ம் பாகமாக இல்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் சில வாரங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றில் தெளிவுபடுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்த சூழலில் கடந்த சில தினங்களாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படம் கைவிடப்பட்டு விட்டது. அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்காது என இணையத்தில் தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த படத்துக்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் அது முடிந்த பிறகு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி படப்பிடிப்பு உறுதியாக துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இப்படி ஒரு தகவல் பரவ காரணம் என்ன என்றும் தெரிய வந்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் சம்பளம் வாங்கவில்லை. பிராபர்டி ஷேர் அடிப்படையில் அதாவது லாபத்தில் பங்கு என்ற முறையில் இந்த படத்தில் நடிக்க முதலில் சிம்பு சம்மதித்து இருக்கிறார். ஆனால் இப்போது நடிகர் சிம்பு, எனக்கு பிராபர்டி ஷேர் வேண்டாம், சம்பளம் ரூ. 45 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

- Advertisement -

இதனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு அப்செட் ஆகியிருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்குனர் வெற்றிமாறனுக்கு ரூ. 20 கோடி வரை சம்பளமாக கொடுத்து விட்டார். இப்போது சிம்பு சம்பளம் ரூ. 45 கோடி என்றால் இதுவே 65 கோடி ரூபாய் ஆகிவிடும். மற்றவர்களின் சம்பளம், ஷூட்டிங் செலவு என திட்டமிட்டால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 100 கோடியை தாண்டிவிடும்.

அதனால் தயாரிப்பாளர் தாணு, நடிகர் சிம்புவிடம் அவ்வளவு சம்பளம் தர முடியாது. வேண்டுமானால் 20 கோடி ரூபாய் சம்பளமாக தருகிறேன் என்று பேசியிருக்கிறார். இதற்கு சிம்பு தரப்பில் சம்மதம் கிடைத்ததா, இல்லையா என்பது உறுதியாகவில்லை. அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கினால் மட்டுமே சம்பளம் பேச்சுவார்த்தை இழுபறி இன்றி முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம். இல்லை என்றால், வெற்றிமாறன் படத்தில் சிம்பு நடிப்பாரா, மாட்டாரா என்பதும் உறுதியாகி விடும்.

- Advertisement -

சற்று முன்