- Advertisement -
Homeபொழுதுபோக்குரிலீஸ் ஆன 2 நாட்களில் மாரீசன் தலைவன் தலைவி படங்களின் வசூல் நிலவரம் எப்படி? வெளியான...

ரிலீஸ் ஆன 2 நாட்களில் மாரீசன் தலைவன் தலைவி படங்களின் வசூல் நிலவரம் எப்படி? வெளியான பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்!

- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நித்யாமேனன் நடிப்பில் தலைவன் தலைவி படம் நேற்று முன்தினம் 25ம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜன் இயக்கி உள்ளார். ஏற்கனவே பசங்க நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் என்பதால் இந்த படத்துக்கு அதீத கவனம் ரசிகர்களிடம் காணப்பட்டது.

மகாராஜா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான அவரது 51வது படம் ஏஸ் பெரிய வரவேற்பை பெறாமல் பிளாப் ஆனது. அதனால் இந்த படம் அதிகமாக கவனம் பெற்றது. பரோட்டா மாஸ்டராக ஆகாசவீரன் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

கணவன் மனைவி சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை ஒரு தரப்பு நல்ல படம் என்றும் ஒரு தரப்பு படம் முழுக்க காரணமே இல்லாமல் சண்டை போடுவதும் பிரிவதும் சேருவதும் என தலைவன் தலைவி படம் பெரிய தலைவலியாக படம் பார்ப்பவர்களுக்கு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த படம் வெளியான அதே நாளில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் மாரீசன். இயக்குனர் சுதீஷ் சங்கர் டைரக்‌ஷனில் உருவான இந்த படத்தில் நடிகர்கள் வடிவேலு பகத் பாசில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட வடிவேலுவிடம் இருந்து அவரது பணத்தை மொத்தமாக பகத் பாசில் அபகரிக்க திட்டமிடுவதுதான் இந்த படத்தின் கதை.

- Advertisement -

ஏற்கனவே மாமன்னன் படத்தில் வடிவேலு, பகத்பாசில் இணைந்து நடித்திருந்த நிலையில் அந்த படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. அந்த காம்போ மீண்டும் மாரீசன் படத்தில் இணைந்திருக்கிறது. இந்த முறையும் அதே வரவேற்பை பெற்றார்களா, அதே வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததா என்றால் மாரீசன் படத்துக்கு இதுவரை கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

இந்நிலையில் 2 நாட்களில் இந்த படங்களின் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தலைவன் தலைவி படம் உலகளவில் 17 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும், மாரீசன் படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 4 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் வரும் நாட்களில் இந்த படங்களில் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்