- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு, ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்து விட்டால் அந்த வேலைக்கு...

எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு, ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்து விட்டால் அந்த வேலைக்கு போய் விடுவேன் – மலையாள நடிகர் பகத் ஃபாசில் பளிச்!

- Advertisement -

மலையாள பட இயக்குனர் பாசில் பல வெற்றிப் படங்களை தந்தவர். தமிழிலும் அவர் சில நல்ல படங்களை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். குறிப்பாக பூவே பூச்சூடவா வருஷம் 16 பூவிழி வாசலிலே என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு காதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களை இயக்கியவர்தான் இயக்குனர் பாசில்.

இப்படி அற்புதமான படங்களை தந்த இயக்குனர் பாசில் மகன்தான் இப்போது மலையாளம் தமிழ் சினிமாவில் அட்டகாசமான நடிகராக பவனி வரும் நடிகர் பகத் ஃபாசில். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் அறிமுகமான பகத் ஃபாசில் தொடர்ந்து விக்ரம் மாமன்னன் வேட்டையன் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இப்போது நடிகர் வடிவேலுவுடன் பகத் ஃபாசில் இணைந்து நடித்த படம் மாரீசன், நேற்று முன்தினம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கெொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணக்காரர் வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை அபகரிக்க திட்டமிடும் ஒரு திருடன் கேரக்டரில் பகத் ஃபாசில் அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்.

தமிழில் நய்யாண்டி ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நஸ்ரியாவை தான் நடிகர் பகத் ஃபாசில் திருமணம் செய்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து தமிழில் நடிக்காமல் உள்ள நஸ்ரியா, மலையாளத்தில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ் ஒன்றிலும் அவர் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பகத் ஃபாசில் கூறியதாவது, சினிமாவில் ரசிகர்களுக்கு என்னுடைய நடிப்பு பிடிக்கவில்லை என்றால் பார்சிலோனாவிற்கு சென்று ஊபர் டிரைவர் ஆகிவிடுவேன். ஒருவரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வது ஒரு அழகான விஷயம். இப்போது எனக்கு வண்டி ஓட்ட நேரம் கிடைக்கும்போது டிரைவிங் செய்கிறேன். டிரைவிங் செய்வதை தான் எனக்கான நேரமாக நான் பார்க்கிறேன் என்று நடிகர் பகத் ஃபாசில் கூறியிருக்கிறார்.

வழக்கமான பெரும்பலான நடிகர்கள் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றாமல் வெளிநாடுகளுக்கு சென்று எஞ்சி நாட்களை சந்தோஷமாக கழிக்க விரும்புவார்கள். அல்லது இயக்குனராக மாறுவார்கள். அல்லது தயாரிப்பாளராக மாறுவார்கள். ஆனால் பார்சிலோனாவுக்கு சென்று ஊபர் டிரைவராக மக்களுக்கு சேவை செய்வேன், கார் ஓட்டுவேன் என்று நடிகர் பகத் ஃபாசில் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்