- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி நடந்துக்கொண்ட நடிகை குஷ்பு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற இயக்குனர் பாரதிராஜா சொன்ன...

ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி நடந்துக்கொண்ட நடிகை குஷ்பு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற இயக்குனர் பாரதிராஜா சொன்ன அந்த கடுமையான வார்த்தைகள்…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. சில படைப்பாளிகளுக்கு விருதுகளால் பாராட்டுகளால் புகழால் என்றும் பெருமை கிடைப்பதில்லை. ஏனென்றால் அதற்கெல்லாம் அப்பாற்றப்பட்ட ஒரு கலையின் உச்ச அடையாளங்களாக அவர்கள் இருந்து விடுகின்றனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல இயக்குனர்களில் ஒரு இமயமாக இருந்தவர்தான் பாரதிராஜா. கல்லையும் கலை பேச வைத்த வித்தகர்.

கடலோர கவிதைகள் 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் அலைகள் ஓய்வதில்லை முதல் மரியாதை சிவப்பு ரோஜாக்கள் கிழக்குச் சீமையிலே என பாரதிராஜா இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவின் சரித்திரம் பேசும் படங்களாக இருந்திருக்கின்றன. இப்போது முதல் மரியாதை போன்ற ஒரு யதார்த்தமான படத்தை, அப்படி ஒரு கதைக்களத்தில் அந்த படத்தை தந்த பாரதிராஜாவே நினைத்தாலும் உருவாக்க முடியாது என்றுதான் ரசிகர்கள் புகழ்ந்து சொல்கின்றனர்.

- Advertisement -

இயக்குனராக மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக தன்னை ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் பாரதிராஜா வெளிப்படுத்தி வருகிறார். நம்ம வீட்டுப்பிள்ளை திருச்சிற்றம்பலம் குரங்கு பொம்மை பாண்டியநாடு போன்ற படங்களில் பாரதிராஜாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது மகன் நடிகர் மனோஜ்குமாரை பறிகொடுத்த இயக்குனர் பாரதிராஜா, இப்போதுதான் அந்த சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 1990களில் நடந்த சம்பவம் இது. அப்போது நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். முன்னணி நாயகியாக பல ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த குஷ்புவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் அவர் மீது அதீத அன்பை காட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்போது இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கேப்டன் மகள் என்ற படத்தில் நடிகை குஷ்பு நடித்தார். அப்போது ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் குஷ்பு இருந்த போது, பக்கத்தில் வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கும் நடந்துள்ளது. அங்கு பல் பிடுங்கப்பட்ட பாம்பு ஒன்றை கொண்டு வந்துள்ளார். அந்த பாம்பை போய் வாங்கி வந்த குஷ்பு, கையில் பாம்புவுடன் பாரதிராஜா அருகில் சென்றுள்ளார்.

சார், இங்க பாருங்க பாம்பு என்று அவருக்கு அருகில் பாம்பை காட்டியுள்ளார். பாம்பை பார்த்து பயந்த பாரதிராஜா அங்கும் இங்கும் ஓடியிருக்கிறார். பல் பிடுங்காத பாம்பு என்று எண்ணி பாரதிராஜா பயத்தில் அலறியிருக்கிறார். கை கால் எல்லாம் நடுங்கி வெடவெடத்து போய்விட்டார். பயங்கர டென்சனாகி விட்டார். அப்போது நடிகை குஷ்புவிடம், நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தா அதுக்கு நீதான் காரணம் என்று பலபேர் முன்னிலையில் குஷ்புவை கண்டபடி திட்டி இருக்கிறார். இந்த தகவலை நடிகை குஷ்புவே ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்