- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்காவில் முன்னதாகவே களமிறக்கப்படுகிறதா கூலி திரைப்படம்... அப்படின்னா இந்த தடவை வெளிநாட்டு விமர்சனங்கள் அதிகம் இருக்குமேப்பா....

அமெரிக்காவில் முன்னதாகவே களமிறக்கப்படுகிறதா கூலி திரைப்படம்… அப்படின்னா இந்த தடவை வெளிநாட்டு விமர்சனங்கள் அதிகம் இருக்குமேப்பா….

- Advertisement -

2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கு வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் அதுதான் என்று கூறலாம். கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த, லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் ரஜினிகாந்த் இணைந்து வேட்டையன் திரைப்படத்தை கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படியான சூழலில்தான் தற்போது ரஜினிகாந்த்க்கு அடுத்ததாக கூலி திரைப்படம் தயாராகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சோபின் சாஹிர் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். துறைமுகத்தை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட செட் போட்டு படத்தை எடுத்தார்கள்.

தனது முந்தைய திரைப்படங்களைப் போல் இதில் போதை வஸ்துகளை குறி வைத்து லோகேஷ் கனகராஜ் கதை எழுதவில்லையாம். மாறாக தங்க வாட்ச்சுகளை மையப்படுத்தி இதன் கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான சிக்கிடு, மோனிஷா, பவர் ஹவுஸ் ஆகிய மூன்று பாடல்களும் ஹிட் அடித்தன.

- Advertisement -

கூலி திரைப்படம் குறித்து பேசி இருந்த லோகேஷ் கனகராஜ், படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார். தளபதி போல் இருப்பதாகவும் ரஜினிகாந்த் என்னிடம் தெரிவித்தார். நாம் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்றும் அவர் கூறியிருந்தார். அதற்காக தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே படத்தின் டிரைலரும் வெளியாகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சியாக இருக்கும். அதேசமயம், அமெரிக்காவில் ஆகஸ்ட் 13ஆம் தேதியே மாலை 6:30 மணிக்கு கூலி திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இது, ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 5 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்