- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? கேரளாவில் தீயாக...

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? கேரளாவில் தீயாக பரவும் தகவல் – உண்மை நிலவரம் என்ன?

- Advertisement -

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மம்முட்டி. பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். சிறந்த நடிகராக பல விருதுகளை வென்றவர். கடந்தாண்டில் வெளியான பிரமயுகம் என்ற படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இப்போது அவருக்கு 73 வயதாகிறது. ஆனால் இன்னும் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார்.

மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் தளபதி ஆனந்தம் மறுமலர்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மக்கள் ஆட்சி கிளிப்பேச்சு கேட்கவா உள்ளிட்ட பல படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார். அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நடிகர் மம்முட்டி மிகவும் பிடித்தமான ஒரு நடிகராகவே இன்றும் இருந்து வருகிறார். கடைசியாக அவர் தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய பேரன்பு என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பசூகா. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது. இப்போது களம் காவல் என்ற படத்தில் மம்முட்டி நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக நடிகர் மோகன்லாலுடன் பேட்ரியாட் என்ற படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார்.

வழக்கமாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகர் மம்முட்டி இப்போது தனது அடுத்த படத்தை ஒப்பந்தம் செய்யாமல் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பே நடிகர் மம்முட்டிக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதும் அவருக்கு புற்றுநோய் என்றும் தகவல் பரவியது. ஆனால் இது சாதாரண உடல்நலப் பிரச்னைதான் என்று நடிகர் மம்முட்டி தரப்பிலிருந்து விளக்கமும் தரப்பட்டது.

- Advertisement -

மேலும் நடிகர் மம்முட்டியின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் மோகன்லால் தலையில் இருமுடியுடன் சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமி சன்னதியில் நடிகர் மம்முட்டிக்கு சிறப்பு அர்ச்சனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நடிகர் மம்மூட்டி சினிமாவை விட்டு விலக இருப்பதாக ஒரு தகவல் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. இது மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சினிமாத்துறை தரப்பில் இருந்து, தற்காலிகமாக தான் அவர் ஓய்வெடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், உடல்நிலை பூரண குணமடைந்த பிறகு அவர் மீண்டும் வழக்கம் போல படங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக நடிகர் மம்முட்டி தரப்பில் இருந்து எந்த விதமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்