தமிழ் சினிமாவில் பெரும்பாலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் சம்பள விஷயத்தில் மிகவும் கெடுபிடி செய்யக்கூடியவர்களாக தான் இருக்கின்றனர். சம்பளத்தில் ஒரு பெரும் தொகையை அட்வான்ஸ் ஆக தர வேண்டும் என்று சொல்வதுதான் பல நட்சத்திர ஹீரோக்களின் வழக்கம். அதிலும் தொடர்ந்து தோல்வி படங்களை தரும் சில ஹீரோ நடிகர்கள் கூட தங்களது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி கொண்டே செல்கின்றனர்.
இதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் நடிகர் ரஜினிகாந்த். அவரைப் பொறுத்தவரை சம்பள விஷயத்தில் எப்போதுமே கெடுபிடி காட்டுவது அவரது வழக்கம் இல்லை. 25 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுத்து விட்டால் போதும். அவர் ஒப்புக்கொண்ட படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார்.
அந்த படத்தின் ஷூட்டிங் முடியும் வரை மேற்கொண்டு சம்பளம் தொடர்பாக அவர், தயாரிப்பு நிறுவனத்திடம் எதுவுமே பேசமாட்டார். ஆனால் அவரது சம்பளம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அவருக்கு வந்துவிடும். இதுதான் அவரது வழக்கம். எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கறாராக கேட்கும் வழக்கம் ரஜினியிடம் பல ஆண்டுகளாகவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வருகிற 14ம் தேதி கூலி படம் ரிலீஸ் ஆகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது,
கூலி படத்தில் மல்டிபில் ஸ்டார்ஸ் உபேந்திரா நாகார்ஜூனா சௌபின் சாஹிர் அமீர்கான் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அதனால் இந்த படத்துக்கு வணிக ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் நான் தியேட்டரிக்கல் என டிஜிட்டல் உரிமம் சேட்டிலைட் உரிமம் ஆடியோ ரைட்ஸ் ஓவர்சீஸ் விற்பனை என இதுவரை கூலி படத்துக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடந்துள்ளது.
அதனால் ரஜினி தரப்பில் இருந்து கூலி படத்தில் ரஜினிகாந்த் சம்பளத்தை 150 கோடியில் இருந்து 200 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ரஜினி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் என்ன முடிவு செய்யப் போகிறார்? ரஜினி கேட்கும் 200 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சயமாக கூலி படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளும்போது 200 கோடிக்கு பதிலாக 300 கோடி ரூபாய் கூட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சம்பளத்தை வழங்கி விடுவார். அந்தளவுக்கு அவர் தாராள மனம் கொண்டவர் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.





